Thursday, November 14, 2024
Homebattery backup480 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் நோக்கியா போன்

480 மணி நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் நோக்கியா போன்

நோக்கியா நிறுவனம் பட்ஜெட் போன் வரிசையில் 480 மணி நேரம் பேட்டரி நிற்கும் போனை வெளியிட்டுள்ளது. இந்த போன் 2G அலைவரிசையை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நோக்கியா எஸ் 40 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் உள்ள சிறப்பம்சங்களாவன: 
குவரெட்டி கீபோர்ட் அமைந்துள்ளது. இது SMS டைப்செய்ய எளிதாக இருக்கும். 2.4 அங்குல வண்ணத்திரை கொண்டது. நெட் வொர்க் இணைப்பிற்குப் பயன்படும் GPRS, EDGE, A2DP ஆகியவைகள் இணைந்த புளூடூத் தொழில்நுட்பம் கொண்டது.

இது ஒரு விநாடிக்கு 15 பிரேம் வேகத்தில் செயல்படும் வீடியோ VGA Camera வைக் கொண்டிருக்கிறது. 

செய்திகள் மற்றும் பாடல்கள் கேட்க எப்.எம். ரேடியோ உள்ளது. மேலும் MP4, MP3 மியூசிக் பிளேயர், 64 எம்.பி நினைவகம், 8ஜிபி வரைக்கும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரியை அதிகப்படுத்திக்கொள்ளும் வசதி, ஸ்பீக்கர் போன். 3.5 மிமீ ஆடியோ ஜாக், லித்தியம் அயன் 1,020 mAh Battery ஆகியவையும் உள்ளன.

தலைப்பில் கூறியபடி இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 480 மணிநேரம் பேட்டரியில்  போனுக்குத் தேவையான மின்சக்தி இருக்கும். இதில் ஒரு முறை சார்ஜ் ஃபுல் செய்துவிட்டு தொடர்ந்து 4.5 மணி நேரம் பேச முடியும். 107.5 கிராம் எடை கொண்ட இந்த போனின் பரிமாண அளவு 119.4×59.8×14.3 ஆகும். 
இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனில் விலை ரூபாய்: 
இது எல்லா இந்திய ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. 
ஆங்கிலத்தில் இந்த போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். 
Nokia Asha 210 Key Specifications:
  • SIM: Single SIM and Dual SIM variants
  • Platform: Series 40
  • Display: 2.4 inches QVGA LCD
  • Camera: 2 Megapixels
  • Micro SD: Yes
  • Connectivity: Bluetooth, WiFi, 2G
  • Battery: 1200 mAh

Tags: Nokia asha phones, long life battery phones, Nokia’s life long battery phones, Nokia lowest price phone, Nokia budget phone, Nokia qwerty keyboard phone, Nokia, Nokia ordinary phone, simple phone from Nokia

RELATED ARTICLES

Most Popular

Recent Comments