Monday, December 23, 2024
Homemobile specificationநோக்கியாவின் புதிய பெட்ஜெட் போன்

நோக்கியாவின் புதிய பெட்ஜெட் போன்

நோக்கியாவின் புதிய போன் நோக்கியா 208DS. கடந்த மாதம் இந்த போனைப் பற்றிய அறிவிப்பை நோக்கியா வெளியிட்டது. 
2.4 இன்ச் அகலம், 240×320 பிக்செல் அகலம் கொண்ட திரையுடன் வெளிவந்துள்ளது.  இதில் நோக்கியா சீரிஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டுள்ளது. சமூக தளங்களை அணுகும் விதத்தில் இதனுடன் பேஸ்புக், வாட்ஸ் மற்றும் டிவிட்டர் அப்ளிகேஷன்களும் பதியப்பட்டுள்ளது. இப்போனில் தடிமன் 12.8 மி.மீ. எடை 90.6 கிராம். 
1.3 MP திறன்கொண்ட கேமரா படங்கள் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள சிறப்பம்சம் போன் இயக்கத்தை நிறுத்தாமலேயே சிம்கார்டினை மாற்றக்கூடிய வசதியைக் கூறலாம். மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், மைக்ரோ சிம் பயன்பாடு, புளூடூத் 3.0, மைக்ரோ எஸ் கார்ட் உதவியுடன் 32 ஜிபி வரைக்கும் மெமரியை அதிகரிக்கும் திறன் மற்றும் பாடல்கள் கேட்க 3.5 ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, ரேடியோ ரெக்கார்டிங் , ஜிபிஎஸ் போன்ற மேலதிக வசதிகளைப் பெற்றுள்ளது. 
nokia-208-budget-smartphone-for-rs-4500

ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. சிவப்பு, சியான், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் தனிப்பட்ட முறையில் கண்ணைக் கவரும் விதத்ததில் உள்ளன. 
இச்சிறப்பு மிக்க சிம்பிளான போனின் விலை ரூபாய் 5,299. தற்பொழுது விற்பனை செய்யப்படும் விலை ஒரு ஆயிரம் ரூபாய் வரைக்கும் குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஸ்டோரிலும் வாங்கலாம். அந்தந்த விற்பனை நிலையங்களுக்கேற்ப விலையில் சலுகைகள் கிடைக்கும். 
பிரலப ஆன்லைன் ஸ்டோர்களாக பிலிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் கடைகளிலும் இந்த மொபைல் விற்பனைக்கு கிடைக்கிறது. இணையம் மூலம் வேண்டுவோம் இத்தளங்களின் மூலம் Nokia 208 phone ஐ வாங்கலாம். 
ஆங்கிலத்தில் சிறப்பம்சங்கள்:

Key Specifications of Nokia 208DS: 

  • 2.4-inch LCD Transmissive Screen
  • Dual Standby SIM (GSM + GSM)
  • 1.3 MP Primary Camera
  • 2G and 3G Support
  • Alphanumeric Keypad
  • GPRS and EDGE Enabled
  • Expandable Storage Capacity of 32 GB
  • FM Radio with Recording

Tags: Nokia, nokia 208, nokia with 1.3 mp camera, nokia with 32 gb external memory, nokia budget phone, nokia 208 budget smartphone, nokia 208 ordinary phone, simple nokia phone with camera, simple nokia for ordinary use, Nokia with light wieght, nokia phone with bluetooth 3.0, nokia with expandable memory upto 32gb with smartphone, nokia windows phone, nokia android phone for lowest price, nokia lowest price phones with 3.5 audio jack
RELATED ARTICLES

Most Popular

Recent Comments