Wednesday, January 22, 2025
HomeAndroidமைக்ரோமேக்சின் புதிய டேப்ளட் பி.சி.!

மைக்ரோமேக்சின் புதிய டேப்ளட் பி.சி.!

கடந்த மாதம் பெர்லின் நகரில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் உலகின் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதிய படைப்புகளான ஸ்மார்ட்போன், டேப்ளட் பிசி, கம்ப்யூட்டர்கள், டிவிக்கள் என டிஜிட்டல் சாதனங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இம்மாதமும் சில நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதுமட்டுமன்றி முந்தைய தயாரிப்புகளின் விலையையும் கணிசமாக குறைத்து விற்பனையை அதிகரிக்கும் யுக்தியைக் கையாண்டு வருகிறது. 
பெரிதும் எதிர்ப்பார்த்து விலையுயர்வால் வாங்காமல் போனவர்கள் இப்பொழுது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 
Micromax-Funbook-Mini-P410-specifications-availability-and-price
மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்ளட்

இந்தியாவில் மைக்ரோமேக்சின் தயாரிப்புகள் மிக பிரபலம். நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும், வாங்க கூடிய விலையிலும் இதனுடைய தயாரிப்புகள் இருப்பதால் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனைச் சந்தையில் விரைவாக முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பிசி ஒன்றை வெளியிட உள்ளது.
Micromax Funbook P410 என்ற பெயர் கொண்ட் டேப்லெட் பி.சி.-ன் சிறப்பம்சங்களைக் காண்போம்.
  • ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லிபீன் இயங்குதளம்
  • டூயல் சிம்
  • 1GHz டூயல் கோர் பிராசசர்
  • 1GB ராம், 
  • 4 GB மெமரி
  • 2 மெகா பிக்சல் கேமரா
  • 0.3 மெகா பிக்சல் பிரண்ட் கேமரா
  • 32 ஜிபி மெமரி விரிவாக்கம் (microSD card)
  • வைஃபை, 3ஜி
  • புளூடூத்
  • 2800mAh பேட்டரி
வெண்மை நிறம் கொண்ட இந்த டேப்ளட் பி.சி.-ன் விலை ரூபாய் 8,820. குறைந்த விலை மற்றும் அதிகப்பயன்பாடு கொண்ட இந்த டேப்ளட் பிசி பிரபல இந்திய ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும். 
ஆங்கிலத்தில்: 

Specifications of Micromax Funbook Mini P410

  • 7.0-inch LCD screen with 1024x600p resolutions
  • Android v4.1 Jelly Bean OS
  • Dual-core processor with 1GHz CPU speed
  • 1GB RAM
  • 4GB, expandable up to 32GB
  • 2.0-megapixel Main camera
  • 0.3-megapixel (VGA) Front camera
  • 2G , 3G Network support
  • 2,800 mAh Battery
  • Dual (2G +3G)
  • Bluetooth v4.0
  • Wi-Fi (802.11 b/g/n)
  • microSD card slot
  • GPS
Tags: Micromax Funbook Mini P410, micromax, specifications, mobile specifications, micromax tablet pc, tablet pc, micromax new tablet pc, micromax new funbook tablet pc micromax funbook tablet pc p410, mircomax p410 funbook tablet pc, micromax funbook tablet pc price in india, availability of micromax funbook tablet pc p410. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments