Monday, December 23, 2024
Homeduplicate email finderபோலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டுபிடிக்க மென்பொருள்

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டுபிடிக்க மென்பொருள்

நமக்குத் தெரியாமல் எத்தனையோ மின்னஞ்சல்கள் நம்முடைய மின்னஞ்ல் முகவரிக்கு வந்து சேரும். அனுப்பியவர்கள் யார்? எங்கிருந்து அனுப்புகிறார்கள் என்பதை நம்மால் அனுமானிக்கவே முடியாதபடி அந்த மின்னஞ்சல்கள் இருக்கும். அவ்வாறான போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய மென்பொருள் உள்ளது. 
போலி மின்னஞ்சல்களால் இன்பாக்ஸ் நிரம்பிவிடும். இதனால் நமக்கு வரும் உண்மையான மின்னஞ்ல்களை கண்டுபிடிப்பது கடினமாகிறது.  

மின்னஞ்சல்களை சோதனையிட:

முதலில் இணையம் மூலம் இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் அடங்கிய கோப்பை (txt, csv, excel, access) இம்மென்பொருளில் இணைத்துவிடுங்கள்.
மின்னஞ்சல் முகவரிகளை டவுன்லோட் செய்ய அந்தந்த மின்னஞ்சல் சேவை நிறுவனங்களே வசதிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளன.
அதுபோன்று தரவிறக்கம் செய்யப்பட்ட டேட்டாபேஸ் கோப்புகளை இம்மென்பொருளில் Import செய்துகொள்ளலாம்.
இம்போர்ட் செய்த பிறகு அதிலுள்ள Check Emails என்னும் பட்டனை அழுத்துங்கள்.
சில நொடிகளிலேயே மின்னஞ்சல் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு, எந்தெந்த மின்னஞ்சல்கள் ஒரிஜினல் எனவும், எந்தெந்த மின்னஞ்சல்கள் டூப்ளிகேட் என்றும் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.
முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளைப் பயன்படுத்தி உங்களிடம் காண்டாக்ட்டில் உள்ள முகவரிகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ள google -ல் Email Checker அல்லது email check software என உள்ளிட்டு கிடைக்கும் முடிவுகளிலிருந்து மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு: நேரடியாக மென்பொருள் இணைப்பை வழங்க முடியாமைக்கான காரணம் சில வேளைகளில் குறிப்பிடப்படும் இணைப்புச் சுட்டி வேறு தளங்களுக்கு ரீடைரக்ட் ஆவதால் மென்பொருளைத் தரவிறக்கம் செயவதற்கான சுட்டியை வழங்க முடியவில்லை.
நன்றி.
Tags: free software, email checking software, duplicate email checker, software for finding duplicate emails in your contact lists, software for unwanted email checking, new email checking software for windows users, email software for pc users, email checking software for mac users, email checking for android devices, email checker for smartphone devices. 
RELATED ARTICLES

1 COMMENT

  1. நான் மிகவும் தேடிக்கொண்டு இருந்த தகவல்.கேட்காமல் அனுப்பி வைத்தமைக்கு மிகுந்த நன்றி.வாழ்க வளமுடன்கொச்சின் தேவதாஸ்

Comments are closed.

Most Popular

Recent Comments