Wednesday, January 22, 2025
Homemobile specificationsபுத்தம் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்..!

புத்தம் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்..!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வித்தியாசமான ஸ்மார்ட்போன் Samsung Galaxy Curved smartphone ஆகும். இப்போனின் திரை சாதாரண போன்களில் இருந்து மாறுபட்டது. தட்டையான டிஸ்பிளே உடைய போன்களிலிருந்து மாறுபட்டு, இப்போனானது சற்றே வளைந்து குழி வடிவத்தில் உள்ளது. இதுதான் மற்ற போன்களிலிருந்து இதை வித்தியாசப்படுத்திக் காட்டும் அம்சம் ஆகும். இதில் (Tilting technology) புதிய நுட்பம் இடம்பெற்றிருக்கிறது. 
உலகின் முதல் “Curved smartphone” இதுவாகும்.  
மற்றபடி Samsung Galaxy Note 3 போனில் உள்ள சிறப்பம்சங்களைப் போன்றே இதிலும் இடம்பெற்றுள்ளது. அது என்னென்ன என்பதைப் பார்ப்போம். 
சற்றே குழிந்த (Curved) வடிவமுடன் காணப்படும்  1920×1080 பிக்சல் மற்றும் 5.7 அங்குலம் கொண்ட சூப்பர் அமோலெட் திரை ஹெச்.டி திரை அமைப்பு, 7.9mm தடிமன், 154 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள் சாம்சங் கேலக்சி நோட் 3 யை ஒத்துள்ளது. 
Samsung-Galaxy-curved-smartphone-specifications-price-and-availability

தமிழில் சிறப்பம்சங்கள்: 

  • ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓ.எஸ்.ல் இயங்குகிறது. 
  • 2.3GHz snapdragon 800 குவாட்கோர் ப்ராசசர் மற்றும் 3GB ராம் ஆகியவை இப்போனை சிறப்பாகசெயல்பட வைக்கிறது. 
  • வீடியோ மற்றும் தரமான படங்களை எடுக்க 13 மெகா பிக்சல் கொண்ட 
  • கேமரா
  • வீடியோ காலிங் மற்றும் வீடியோ சாட்டிங் செய்ய 2 மெகா பிக்சல் திறன் கொண்ட முன்புற கேமிரா ஆகியனவற்றையும் இது பெற்றுள்ளது.
  • 32 GB உள்ளக நினைவகத்தைப் பெற்றிருக்கும் இந்த போனின் அனைத்து பகுதியைகளையும் இயக்கத் தேவையான மின்சக்தியை அளிக்க 2800 mAh பேட்டரி இதுனுள்ளே அமைந்துள்ளது. 

Galaxy round smartphone ல் உள்ள குறிப்பிடத்தக்க வசதிகள்: 

  • Roll Effect : Home Screen Off ல் இருக்கும்போது தேதி, நேரம், மிஸ்டுகால், பேட்டரியின் அளவு மற்றும் மேலதிக வசதிகளை அறிய இலேசாக “ரோலிங்” செய்தாலே போதும். அதுபற்றிய தகவல்களை ஒருபக்கம் காட்டும். 
  • Bounce UX: மியூசிக் பிளேயரை கட்டுப்படுத்த அதனுடைய ஓரங்களில் இலேசாக தட்டுவதன் மூலம் வேண்டிய கண்ட்ரோல்களைப்பெற முடியும். 
  • Gravity Effect: இடது வலது புறம் வருமாறு போனை குலுக்குவதால் (tilt) காட்சித் தொடர்பைப் பெற முடியும். 
  • Side Mirror: ஆல்பத்தில் உள்ளவைகளை அணுகுவதற்கு இடது மற்றும் வலது புறமாக குலுக்குவதன் மூலம் பெற முடியும். 

Samsung Galaxy Round Smartphone Main Specifications

  • 5.7-inch Amoled HD 1080p flexible display (1920×1080 pixels)
  • Android 4.3 Jelly Bean OS
  • 2.3 GHz quad-core Snapdragon 800 processor
  • 13 MP rear camera
  • 2 MP front facing camera
  • 32 GB internal memory
  • 7.9 mm thickness, 154 grams weight
  • 2800 mAh battery

இப்போன் தற்பொழுது கொரிய நாட்டில் அமெரிக்க டாலர் $1,013 கிடைக்கிறது. மற்றநாடுகளில் எப்பொழுது கிடைக்கும் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை. இது “லக்சரி பிரௌன்” மற்றும் மேலதிக நிறங்களில் விரைவில் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
நன்றி. 
Tags: samsung galaxy, samsung, mobile specifications, specifications, Samsung Galaxy curved, Samsung Galaxy curved smartphone
RELATED ARTICLES

Most Popular

Recent Comments