Friday, January 24, 2025
Homenew nokia flagship tablet pc 2520Nokia நிறுவனத்தின் முதல் Tablet PC அறிமுகம்..!

Nokia நிறுவனத்தின் முதல் Tablet PC அறிமுகம்..!

மிகப் பிரபலமான போன் தயாரிப்பு நிறுவனம் நோக்கியா. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்த பிறகு இந் நிறுவனம் வெளியிடும் முதல் டேப்ளட் பிசி இது.

Nokia Lumia 2520  என்ற இப்புதிய டேப்ளட் பிசி 10.1 அங்குலம் IPS LCD தொடுதிரையுடன் வெளிவந்துள்ளது. புதிய விண்டோஸ் 8.1 இயங்குதளத்தில் இது செயல்படுகிறது. 

இதில் அமைந்துள்ள செயலி 2.2GHz  quad-core processor (Qualcomm Snapdrgon 800) ஆனது டேப்ளட்டை விரைவாக இயங்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இப்புதிய டேப்ளட் பிசியில் டேட்டா பரிமாறப்படும் வேகம் 150 Mbps ஆகும். 
இதில் அமைந்துள்ள 6.7 மெகா பிக்சல் திறன் கேமரா மூலம் துல்லியமான அதிக தரமிக்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். 
Nokia Lumia 2520 tablet pc with Full HD display, windows 8.1 OS released

25 நாட்களுக்குப் போதுமான மின்சக்தியை சேமித்துக் கொடுக்கும் ஆற்றல் மிக்க 8000 mAh Battery அமைந்துள்ளது. 
இது மெல்லியதாகவும், மென்மையான தன்மையுடனும் கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது. 
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் சிவப்பு, நீலம் கருப்பு, வெண்மை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது.
உங்களுடைய நோக்கியா லூமியா 2010 ஸ்மார்ட் போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஒரே தட்டலில் (tap) நோக்கியா டேப்ளட் பிசியில் மாற்றிக்கொள்ள முடியும். பாடல்கள் முதற்கொண்டு, ஸ்மார்ட் போனில் உள்ள கோப்புகளை டேப்ளட் பிசிக்கு மாற்றிப் பயன்படுத்த முடியும். 
Nokia Lumia 2520 tablet pc with Full HD display, windows 8.1 OS released
 Nokia Power Keyboard ஐப் டேப்ளட் பி.சியுடன் இணைத்து செயலாற்றலாம். தொடந்து ஐந்து மணி நேரம் இக்கீபோர்டைப் பயன்படுத்தி டேப்ளட்டில் வேலைகள் செய்ய முடியும். இதற்கு முன்பு இந்தளவிற்கு வசதிகள் வேறந்த டேப்ளட் பிசியிலும் இருந்ததில்லை.  
LTE Connectivity Fort உடன் கூடிய மிக விரைவாக சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது. ஒரு மணிநேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகிடும் வேகம் கொண்டுள்ளமையால் நீண்ட நேரம் இதில் வேலைகள் செய்திட முடியும். 
தற்பொழுது அமெரிக்காவில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த டேப்ளட் பி.சி. வெகு விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு கிடைக்கும்.

Main Key Specifications of Nokia 2520 Tablet Pc

  • 10.1 IPS LCD Touch Screen
  • 6.7 MP Primary Camera
  • 8000 mAh Battery
  • 150 Mbps LTE max data speed
  • 2.2 GHz Quad-core Qualcomm Snapdragon 800 processor

Nokia Lumia 2520 tablet pc with Full HD display, windows 8.1 OS released
Tags: new nokia tablet pc 2520, nokia first tablet pc 2520, new nokia flagship tablet pc 2520, Nokia tablet pc with windows 8.1, windows 8.1 tablet pc from nokia. nokia tablet pc.
RELATED ARTICLES

2 COMMENTS

  1. எல்லா தகவலையும் நல்லா தொகுத்து வழங்கியிருக்கீங்க. இன்னும் நிறைய எழுதுங்கள்.. பாராட்டுக்கள்…

  2. அன்பின் பழனி – தகவல்கள் அனைத்தும் பகிர்வினிற்கு நன்றி – முக்கியமான தகவல் – விலை என்ன – கூறவும். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Comments are closed.

Most Popular

Recent Comments