Saturday, January 25, 2025
Homecomputer repairகம்ப்யூட்டர் பழுது ஆகாமல் வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

கம்ப்யூட்டர் பழுது ஆகாமல் வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா?

இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம்.

உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும். 

CPU சுத்தம்: 

1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க… கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம். 
2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.
3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா….அதோட வேகம்  குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க…அப்படி சுத்தலேன்னா…. சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும். 
4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை…
தீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும். 

KeyBoard சுத்தம்: 

அடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம “தங்கம்பழனி” சார் “தொழில்நுட்பம்” தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க…
1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது… கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.
2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்… குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்…அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்… 
3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்…அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்… 
4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க… நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்.. 
தீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க… உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம “பளிச்”ன்னு மின்னும்.

Mouse சுத்தம்:

நாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.

இப்போ இருக்கிற மௌஸ்…புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க…மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. “Air Bump” வச்சும் சுத்தப்படுத்தலாம். 

Screen சுத்தம்: 

அதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க… அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும்.  ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற “வெல்வெட்”துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்…
இதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.
Tips: computer tips, computer, computer maintenance, cpu maintenance, screen maintenance, mouse maintenance, computer cleaning tips, mouse cleaning, cpu cleaning, avoid repair from dust, protect computer from dust, computer protection tips, computer cleaning tips, 
RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments