Monday, December 23, 2024
HomeFree softwareஆப்பிள் போனிற்கான VLC மீடியா பிளேயர் !

ஆப்பிள் போனிற்கான VLC மீடியா பிளேயர் !

கம்ப்யூட்டரில் வீடியோக்களை ப்ளே செய்ய பயன்படுபவை வீடியோ பிளேயர்கள். விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Windows Media Player  டீபால்டாக கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில்அதிக வசதிகள் இருப்பதில்லை. அதனால் கூடுதலான வசதிகளைப் பெறுவதற்கு 3r party சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து பயன்படுக்கின்றனர். அவற்றில் சிறந்த மீடியா பிளேயர் VLC Media Player.

1. மௌசை தொடாமலேயே VLC Media Player இயக்கலாம்..!!

https://itunes.apple.com/app/vlc-ios/id650377962


முதலில் சாதாரண பதிப்பாக வெளிவந்த VLC மீடியா பிளேயர், அடுத்தடுத்த பதிப்புகளில் புதிய வசதிகளுடன் வெளிவந்தது.  

கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் என இப்போது உள்ள அனைத்து லேட்டஸ்ட் சாதனங்களிலும் பயன்படும் வி.எல்.சி வீடியோ பிளேயர்கள் வந்துவிட்டன.

இருப்பினும் ஒரு சில காரணங்களினால் iPhone, iPod சாதனங்களில் இருந்து வி.எல்.சி நீக்கப்பட்டது. இதனால் ஆப்பிளின் ஸ்மார்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் VLC Video Player – ஐ பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. 
தற்பொழுது வி.எல்.சி வீடியோ பிளேயரில் புது டெக்னிக் பயன்படுத்தி இருப்பதால் மீண்டும் ஐபோட், ஐபோன்களில் விஎல்சி பிளேயரை பயன்படுத்த முடியும். புத்தம் புது வசதிகளுடன் வெளிவந்துள்ள இந்த VLC Media Player ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

VLC Media Player -ல் புதியதாக இணைப்பட்டுள்ள வசதிகள்: 

1. Wi-Fi வசதி..
2. Drop Box வசதி.. 
வைஃபை வசதி மூலம் வீடியோ, ஆடியோ பைல்களை அப்லோட் செய்துகொள்ளலாம்.

அதைப்போலவே Drop Box – டிராப் பாக்ஸ் மூலம் கோப்புகளை சேமித்து கையாளும் வசதி இதில் இடம்பெற்றிருக்கிறது. 
மேலும் Video Media Library உருவாக்கி நிர்வகிக்கலாம்… போன் கேலரி படங்களுக்கு Color Combination ஐ தீர்மானிக்கலாம்… 
அனைத்து வகையான வீடியோ, ஆடியோ கோப்புகளை இந்த விஎல்சி மீடியா பிளேயரில் இயக்கலாம். எந்த ஒரு புது வகையான வீடியோ பார்மேட்டாக இருந்தாலும் அதை சப்போர்ட் செய்கிறது இப்புதிய வி.எல்.சி மீடியா பிளேயர்.
Network file operating, Air Play மற்றும் Bluetooth வசதிகளை இதில் பயன்படுத்த முடியும். 
தற்பொழுது பிரபலமடைந்து கொண்டிருக்கும் இயங்குதளமான Android OS -ல் இயங்க கூடிய மொபைல் போன்களுக்கும் வி.எல்.சி பிளேயர் வெளிவந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
Apple iOS இயங்கும் சாதனங்களில் இந்த புதிய வி.எல்.சி பிளேயர் பயன்படுத்திட வேண்டுமெனில் கண்டிப்பாக அந்த சாதனங்களில் iOS 5.1 அல்லது அதுக்கு மேற்பட்ட பதிப்பு இருக்க வேண்டும். 

 இதையும் படிக்கலாமே: புதிய வி.எல்.சி. வீடியோ பிளேயர் !

ஆக, ஆண்ட்ராய்ட் சாதனம் மற்றும் ஆப்பிள் சாதனங்கள் அனைத்திற்கும் வி.எல்.சி மீடியா பிளேயர் சப்போர்ட் செய்யும் வகையில் வெளிவந்துவிட்டது.

இனி நீங்கள் எந்த போன் வைத்திருந்தாலும், அதில் VLC Player நிறுவி, உங்களுக்குப் பிடித்தமான வீடியோக்களை பிளே செய்து மகிழலாம். 

ஆப்பிள் iOS போன்களுக்கான VLC Media Player – ஐ டவுன்லோட் செய்ய சுட்டி: 
Tags: VLC media player, VLC media player new version, vlc media player for apple ios phone, new version vlc media player for ipod, vlc media player for ios smartphone, new version vlc media player for ipod, vlc media player, vlc media player for apple ios phone, vlc media player for ios smartphone, VLC media player new version.
RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments