Monday, December 23, 2024
HomeMAKE MONEY ONLINEYouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

யூடியூப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. கூகிள் வழங்கும் இலவச வீடியோ சேவை இணையதளம்தான் யூடீடூப். பல மில்லியன் வீடியோக்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளது. தினந்தோறும் பல லட்சக் கணக்கான புதிய வீடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யபடுகிறது. அவ்வாறு பதிவேற்றம் செய்திடும் வீடியோக்களை உலகின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் பார்வையிட முடியும். அவ்வாறு அதிக நபர்களால் பார்க்கப்படும் வீடியோ, Trending ஆகி, மிக பிரபலமாகிவிடும்.

அவ்வாறு பதியப்படும் வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதியை யூடியூப் கொண்டுள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் கணக்குத் துவங்கி, வீடியோ அப்லோட் செய்திடலாம். அதுபோல நீங்களும் யூட்யூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது சுலபம். தேவை ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் மற்றும் பயனுள்ள, பொழுதுபோக்கு அம்சம் நிறைய வீடியோக்கள்.

YouTube ல் வீடியோ சேனல் ஒன்றினை உருவாக்கிட வேண்டுமென்றால் கட்டாயம் ஜிமெயில் – இமெயில் உங்களிடத்தில் இருந்திட வேண்டும். உங்களிடத்தில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லையென்றால், அதை எப்படி உருவாக்குவது என தெரிந்துகொள்ள இந்த பதிவை வாசிக்கவும்.

ஜிமெயில் – இமெயில் உருவாக்குவது எப்படி?

அல்லது கீழுள்ள வீடியோவினை பார்வையிடுவதன் மூலம் மிக எளிதாக உங்களால் ஜிமெயில்|இமெயில் உருவாக்கிவிட முடியும்.

சரி.. ஜிமெயில் உருவாக்கி விட்டீர்கள். அதைப் பயன்படுத்தி எப்படி ஒரு யூடியூப் வீடியோ சேனல் உருவாக்குவது? அது மிகவும் சுலபம்தான்.

www.youtube.com இணையதளத்திற்கு செல்லவும். அங்கு Sign In என்பதை கிளிக் செய்து, உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் மூலம் சைன்-இன் செய்துகொள்ளுங்கள்.

அதன் பிறகு எப்படி YOUTUBE CHANNEL உருவாக்குவது என்பதினை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோவில் காட்டப்பட்டுள்ளது சரியாக செய்து உங்களுக்கான சேனல் ஒன்றினை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் குறிப்பிட்டுள்ளபடி, உங்களிடம் உள்ள வீடியோக்களை அப்லோட் செய்து, அவற்றை PUBLIC என்ற முறையில் Publish செய்திடுங்கள். நீங்கள் பதிவேற்றிய வீடியோ மற்றவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிறைய Views பெற முடியும்.

அவ்வாறு செய்து வீடியோ YOUTUBE ADSENSE  POLICY  ஐ பின்பற்றி இருந்தால் மட்டுமே உங்களுக்கு ஆட்சென்ஸ் அப்ரூவல் கிடைக்கும் அதன் பிறகுதான் உங்களைய வீடியோவினை Monetize செய்ய முடியும்.

earn lot of money with youtube

எப்படிப்பட்ட வீடியோவினை அப்லோட் செய்யலாம்?

மொபைல் மூலம் எடுத்த வீடியோக்கள்..
உங்கள் கண்முன்னே நகைச்சுவையான சம்பவங்கள் (Real Fun)
குழந்தைகளின் குறும்புத்தனங்கள்….இயற்கைக் காட்சிகள்… விலங்குகளின் நடவடிக்கைகள்…. கல்வி தொடர்பான டுடோரியல் வீடியோகள், அன்றாட செய்திகள், சினிமா, கிசுகிசு, கிரிக்கெட் என உங்களுக்கு எது சிறப்பாக வருமோ அதை வீடியோவாக பதிவு செய்து அப்லோட் செய்துவிடலாம். அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் அதிக ஹிட் வாங்கினால் உங்கள் காட்டில் பணமழை பெய்ய ஆரம்பித்துவிடும்.

சேனல் ஆரம்பித்து ஒரு சில வீடியோ மட்டும் பதிவேற்றிவிட்டு, சம்பாதிக்க முடியவில்லையே என சலிப்புற்றால் கண்டிப்பாக உங்களால் சம்பாதிக்க முடியவே முடியாது. தொடர்ந்த உழைப்பு, தினந்தோறும் ஒரு வீடியோவாவது அப்லோட் செய்வது என தினமும் உழைத்தால்தான், உங்களுக்கான வெகுமதி கிடைக்கும். ஆரம்பத்தில் மிக குறைவான Earnings மட்டுமே கிடைக்கும். அதனால் மனம் தளாராமல் தொடர்ந்து முயற்சித்து, பல நல்ல வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் நிச்சயமாக உங்களால் Descent Amount சம்பாதிக்க முடியும். 

வீடியோக்களுக்கு சில மேக்கப் வேலைகள் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதற்கு பயன்படுபவை வீடியோ எடிட்டிங் சாப்வேர்கள். வீடியோ எடிட்டிங்க்கு உதவிடும் மென்பொருள் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
இணைப்பில் உள்ள பதிவில் 1. Video Editing, 2. Video Converting, 3. Video Making பற்றித் தெரிந்துகொள்ளலாம். 
வீடியோ எடிட்டிங் செய்து, அவற்றை பார்வையாளர்கள் பார்க்கும்படி அழகுற மாற்றி அப்லோட் செய்தால் பார்ப்பதற்கு நிறைவாக இருக்கும். தேவையற்ற தவறுகள், வீடியோ பகுதிகளை இதன் மூலம் நீக்கி, தரமான வீடியோவை பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும். 
Tags: YouTube videos, YouTube money, money making from YouTube videos, money making with adsense in YouTube, YouTube money making tips, video recording tips, video upload, adsense revenue from YouTube, money making from your own video.
RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments