Friday, January 24, 2025
Homeinternetவைஃபை (WiFi) தெரியும்.அதென்ன லைஃபை (LiFi) ?

வைஃபை (WiFi) தெரியும்.அதென்ன லைஃபை (LiFi) ?

லைபை இன்டர்நெட்டுக்கான புதிய வசதி..!

வைபை (Wi-Fi):

வைFபை என்பது கம்பியில்லா முறையில் இணைய இணைப்பை ஏற்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் என்பது நமக்குத் தெரியும்.
தற்காலத்தில் மிகப் பலர் இத்தொழில்நுட்ப அடிப்படையிலேயே இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஒரு வீட்டில் உள்ள பலரும் ஒரே சமயத்தில் பல்வேறு சாதனங்களின் மூலம் இன்டர்நெட் இணைப்பை (Internet connection) பெற முடியும்.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் ஆன்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிறார்…மற்றொருவரோ லேப்டாப் வைத்திருக்கிறார்… அடுத்தவரோ டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (Desktop Computer) பயன்படுத்துகிறார். 
இன்னொருவர் தனக்குப் பிடித்த டேப் (Tablet PC) வைத்திருக்கிறார்.

இவர்களுக்கு எல்லாம் ஒரே சமயத்தில் இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமெனில் நிச்சயம் வைபை இன்டர்நெட் கனெக்சன் வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம்..

வயர் மூலம் ஒவ்வொரு சாதனத்திலும் இணைய இணைப்பை ஏற்படுதுவது என்பது இயலாத காரியம். வைபை நெட்வொர்க் (Wi-Fi network) இருந்தால் வீட்டில் எந்த பகுதியிலிருந்தும் வயர்லெஸ் மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஒரே வைபை மோடத்திலிருந்து பல்வேறு சாதனங்களுடன் இணைய இணைப்பை ஏற்படுத்திப் பயன்படுத்த முடியும்.
இந்த முறையில் வேறு யாரேனும் வைபை யூசர் அக்கவுண்டினை தெரிந்துகொண்டு இணைய இணைப்பை ஏற்படுத்த முடியும்.

லைபை (Li-Fi)

தற்பொழுது சீனா இப்புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. ஒரு பல்பை எரிய விடுவதன் மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.
விதவிதமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் சீனா, தற்பொழுது இத்தொழில்நுட்பத்தை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு வாட் அளவுள்ள பல்பை எரியவிடும்பொழுது, தானாகவே இணைய இணைப்பு ஏற்படும்படி செய்துள்ளனர். பல்பு எரியாதபோது இன்டர்நெட்டும் போய்விடும்.

ஒரு வினாடிக்கு 150 மெகாபைட் (150MB) வேகம் கொண்டிருக்கும் இத்தொழில்நுட்பம் விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரும் என அதைக் கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக ஆசிரியர் சிநான் கூறியிருக்கிறார்.

லைபை செயல்படும் விதம்:

லெட் வகை பல்பு ஒன்றில் Micro Chip ஒன்று பொருத்தப்பட்டு, அதன் மூலம் அலைக்கற்றைகள் ஏற்படுத்தப்படுத்தபடுகிறது. அந்த அலைக்கற்றைகள் இணைய இணைப்பு வசதியை நமக்கு அளிக்கும்.
li-fi internet system
வைபை வசதியில் ரேடியோ அலைகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் இணைய இணைப்பு கிடைக்கிறது. சீனாவின் கண்டுபிடிப்பில் ஒரு வாட் பல்பை வைத்து இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த முடியும்.

இக்கண்டுபிடிப்பு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் இது ஒரு தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதனால் வைபை வசதி காலப்போக்கில் மாறிவிடும்.

Advantages of Li-Fi Internet Technology லைபை நன்மைகள்:

  • குறைந்த முதலீடு..
  • ஒளி மூலமே நடைபெறுவதால் இணைய அலைக்கற்றைகளின் எல்லை மிக குறைவு. இதனால் மற்றவர்கள் யாரும் பயன்படுத்த முடியாது.
  • ரேடியோ அலைகள் பாதிப்பு என்பது இல்லை.
  • இணைய வேகம் மிக அதிகம்.
  • இந்த வசதியின் மூலமும் வீட்டில் உள்ளவர்கள் குறைந்த 4 பேர் ஒரே நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
  • விமானம், தண்ணீருக்கு அடியில் கூட இணையத்தைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இந்த வசதியில் உள்ளன.
Tags: wi-fi, Li-Fi, Li-Fi technology, china LI-Fi Technology, Li-Fi internet technology, li-fi internet technology for lowest cost, lowest cost internet technology, Li-Fi internet technology for family members, Li-Fi tech for android phone, LiFi for pc, Li-Fi for laptop, Li-Fi tech for Tablet, Li-Fi in india, Li-Fi tech launch in china.
RELATED ARTICLES

2 COMMENTS

  1. இந்த லைபை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.

  2. இந்த லைபை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.

Comments are closed.

Most Popular

Recent Comments