Saturday, January 25, 2025
HomeAndroidஸ்மார்ட்போன் பாதுகாப்பு மென்பொருள் !

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு மென்பொருள் !

உலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் தனிப்பட்ட சில குணங்கள் இருப்பதுண்டு. தனிப்பட்ட பண்புகள் இருப்பது உண்டு. உதாரணமாக கண்கள், கைரேகைகள், இரத்த வகை போன்றவற்றை குறிப்பிடலாம். 
இவைகள் தனிப்பட்ட மனிதர்களுக்கானது. ஒருவருக்கு இருப்பதைப் போல மற்றவர்களுக்கு இவைகள் அமையாது. இயற்கையின் மிகச்சிறந்த வரம் இது.

அதுபோலவே நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையும், எடுப்பது, பிடிப்பது, தூக்குவது இப்படி ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்வதில் வேறுபாடுகள் இருக்கும்.  

ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில் தொடுதல் வேகம், அழுத்தம் ஆகியவை நபருக்கு நபர் வேறுபடும். 
silent sense software for smartphone protection
அவற்றை உள்வாங்கி, உணர்ந்து செல்போனுக்கு உரியவர்தான் அதை பயன்படுக்கிறாரா என்பதை கண்டறிந்து சொல்ல ஒரு மென்பொருள் வெளிவந்துள்ளது.

மென்பொருளின் பெயர்: சைலன்ட் சென்ஸ். (Silent Sense)
இந்த மென்பொருள் அமெரிக்க மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய பிறகு உங்களுடைய செயல்பாடுகளை, பயன்படுத்தும் முறைகளை, அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த நீங்கள் உங்களுடைய விரல்களை பயன்படுத்தும் முறைகள், அழுத்தத்தின் வேகம், தொடும் வேகம் மற்றும், இழுக்கும் வேகம் ஆகியவற்றை கணித்து உள்வாங்கி பதிந்து வைத்துக்கொள்ளும். 
இதனால் உரியவரைத் தவிர வேறு யாராலும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியாது. வேறு நபர்கள் பயன்படுத்த முயற்சிக்கும்பொழுது ஏற்படும் தொடு உணர்வு – அழுத்த மாறுபாட்டால் தானாவேக செல்போன் இயக்கத்தை நிறுத்திவிடும். 
இதை பலரிடம் சோதனை செய்யப்பட்டபோது 99% சரியாக செயல்பட்டதாக இதை கண்டுபிடித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: new software for smartphone, silent software for smartphone, silent sense software, software for android mobile, silent software for android gadgets, smartphone protector,  software for android protection, protect android smartphone from others, silent sense software for smartphone protection from others
RELATED ARTICLES

9 COMMENTS

  1. இந்த மென்பொருள் விரைவில் பயன்பாட்டுக்கு கிடைக்கும். தற்பொழுது தரவிறக்கம் செய்ய எந்த ஒரு இணைப்பும் தரப்படவில்லை.. தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.. திரு கமால் சார்..

  2. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும்போது இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். பகிர்வுக்கு நன்றி.

  3. உபயோகமான தகவலைத் தந்தமைக்கு நன்றி! இந்தியாவுக்கு இந்த மென்பொருள் இந்தியாவுக்கு வரும் நாள் எப்போதோ?

  4. வணக்கம்

    தகவலுக்க மிக்க நன்றி பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  5. வணக்கம்

    தகவலுக்க மிக்க நன்றி பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  6. என்னங்க சாப்ட்வேர் லிங்க்கே கானோம்.அப்பறம் எப்படி யூஸ் பண்ணிட்டு சொல்லுரது.?

Comments are closed.

Most Popular

Recent Comments