Wednesday, January 22, 2025
Homebattery backupஸ்மார்ட்போன் பேட்டரி வாழ்நாளை அதிகரிக்க வழி !

ஸ்மார்ட்போன் பேட்டரி வாழ்நாளை அதிகரிக்க வழி !

Tips for right Charging to increasing smartphone’s battery life

இன்று ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஏனென்றால் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகள் ஏராளம். நாளுக்கு நாள் புத்தம் புதிய வசதிகள் கொடுக்கப்படுகின்றன. அதோ போல அதில் பயன்படுத்தும் செயலிகள் மேம்படுத்தப்பட்டு புதிய வசதிகளுடன் கிடைக்கின்றன. இது போன்ற அதிக பயன்கள் Smartphone ல் இருப்பினும், மிகப் பெரிய குறையாக கருதப்படுவது, அதில் உள்ள பேட்டரி கொள்திறன்தான்.

பேட்டரி பேக்கம் ஒரு நாளைக்கு முழுமையாக இருப்பது அதிசயம்தான். குறிப்பாக வீடியோ, இன்டர்நெட் போன்ற வசதிகளை பயன்படுத்திடும்பொழுது மளமளவென பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடுகிறது.

அவ்வாறு பேட்டரி பேக்கம் வெகு விரைவில் தீராமலிருக்க இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்குப் பயன்படும்.

பேட்டரி விரைவில் பழுதாகமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த அதை முறையாக “சார்ஜ்” செய்யத் தெரிந்திருப்பது அவசியம்.

battery life

பேட்டரியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் வாழ்நாள் அமையும். பேட்டரியை முறையாக சார்ஜ் செய்தால் நீண்ட நாட்கள் உழைக்கும். பேட்டரி சார்ஜ் வெகு விரைவில் தீராமல் இருக்கும்.

ஸ்மார்ட்போன்களில் இரண்டு வகை பேட்டரிகள் பயன்படுத்தபடுகின்றன. 
1. லித்தியம் அயன் பேட்டரிகள் வகை – lithium ion batter
2. லித்தியம் பாலிமர் பேட்டரி வகை – lithium polymer batter
பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் லித்தியம் அயன் வகை பேட்டரிகளே பயன்படுத்தபடுகின்றன. 
லித்தியம் அயன் வகை பேட்டரிகளைப் பராமரிப்பது எப்படி? 
ஸ்மார்ட்போனில் இயங்கும் பேக்கரவுண்ட் அப்ளிகேஷன்கள், வைஃபை, 3ஜி, 2ஜி இன்டர்நெட், ப்ளூடூத் (bluetooth, wi-fi, 3G, 4G) போன்றவை அதிக மின் சக்தியை எடுத்துக்கொள்கின்றன.  இதனால் பேட்டரியிலுள்ள மின்சக்தி அதிகமாக செலவழிந்து பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடுகிறது.
எனவே, தேவையில்லாத பயன்படுத்தாத அப்ளிகேஷன்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவு பேட்டரி சக்தி வீணாவதை தடுத்திடலாம்.
தேவையில்லாமல் பேட்டரி மின்சக்தி வீணாவதை தடுக்க  Smartphone Battery Saver கள் பயன்படுகின்றன. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்திக் கூட பேட்டரி வீணாவதை தடுத்திடலாம்.

பேட்டரியை சார்ஜ் செய்யும் முறை: 

லித்தியம் அயன் வகை பேட்டரிகளை 30 முதல் 40 சதவிகிதம் பேட்டரி உள்ளபோதே சார்ஜ் செய்வது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உதவும். 

லித்தியம் பாலமர் வகை பேட்டரிகளை பேட்டரி முழுவதும் தீர்ந்த பிறகு சார்ஜ் செய்வது பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உதவும். 

எந்த பேட்டரியாக இருப்பினும், அதற்கான சார்ஜரைப் பயன்படுத்துவதே நல்லது. ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட பேட்டரி சார்ஜரை பயன்படுத்துவது நல்லது. சார்ஜரில் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக புதிய ஒரிஜினல் சார்ஜரை வாங்கி உபயோகிக்கபடுத்த வேண்டும். மலிவாக கிடைக்கிறது என்பதற்காக மூன்றாம்தர சார்ஜர்களை வாங்கி பயன்படுத்தவதை தவிர்க்க வேண்டும்.

Quotes for Battery Charging

use original charger to charge,  
stop unwanted apps in your phone
stop connectivity apps unwanted times.
Tags: smartphone tips, battery backup, battery life increasing.

Tags: Battery Charger, Battery Backup, Battery Life, Smartphone Battery.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments