Wednesday, January 22, 2025
Homec cleanerசி-கிளீனர் மென்பொருளின் பயன்பாடு

சி-கிளீனர் மென்பொருளின் பயன்பாடு

சி-கிளீனர் என்றால் என்ன? 

சி-கிளீனர் என்பது கணினியை சுத்தம் செய்யப் பயன்படும் ஒரு மென்பொருள். 
இது கணனியில் இயங்கும் தேவையற்ற மென்பொருட்களின் இயக்கத்தை நிறுத்தவும், நீக்கவும் பயன்படுகிறது.
கணினியில் தானாகவே உருவாகும் டெம்ப் கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது. 
ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்ய பயன்படுகிறது. 
activities of cleaner in computer
தேவையற்ற மென்பொருளை நீக்க (Uninstall)  செய்யப் பயன்படுகிறது. 
கணினி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் சி-கிளீனர் மென்பொருளைப் பயன்படுத்துகின்றனர். 

சி-கிளீனரின் செயல்பாடுகள்: 

சாதாரணமானவர்கள் கம்ப்யூட்டரில் தேவையற்ற கோப்புகளை நீக்க சிரமப்படுவார்கள். கணனிப் பற்றி முழுமையாக அறியாதவர்களுக்கு C-Cleaner மென்பொருள் ஒரு வரபிரசாதம் என்று சொல்லலாம். 
இது தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை நீக்குகிறது. இணையதளங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தும் குக்கீஸ் கோப்புகளை (Cookies) நீக்குகிறது.
விண்டோஸ் கணினியில் உருவாக்கும் தற்காலிக கோப்புகளை நீக்குகிறது. ரெஜிஸ்ட்ரி கோப்புகளில் உள்ள தேவையற்ற குறியீடுகளை நீக்குகிறது. 
தேவையில்லாத மென்பொருள்களை (Unwanted Software Remover) , அது தொடர்புடைய எந்த ஒரு கோப்பையும் விட்டு வைக்காமல் அழிக்கிறது. 
இவ்வாறு செய்வதால் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் உள்ள இடம் காலியாகிறது (Free space in Hard Disk). இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்குவதற்கும் வழிவகை ஏற்படுகிறது. 

டூப்ளிகேட் கோப்புகள் அழிக்கும் வசதி: 

(Duplicate file finder)
புதியதாக வெளிவந்துள்ள சி-கிளீனர் மென்பொருளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
டூப்ளிகேட் பைலை கண்டறிந்து அழிக்க, பைல் பைண்டர் என்ற பட்டனை சொடுக்கி, நீங்கள் எந்த போல்டரில் அல்லது டிரைவில் டூப்ளிகேட் பைல்கள் இருக்கிறது என நினைக்கிறீர்களோ அதைத் தேர்ந்தெடுக்கவும். 
பிறகு சர்ச் என்பதைக் கொடுத்தால் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து வரிசைப்ப்படுத்தும். 
தேவையற்ற கோப்புகள் நேராக உள்ள செக் பாக்சில் டிக் மார்க்கை ஏற்படுத்தி, அவற்றை டெலீட் கொடுத்துவிடலாம். 
ஒரு முறைக்கு இரண்டு முறை அந்த கோப்பு டூப்ளிகேட் தானா (confirm as duplicate files) என்பதை உறுதி செய்த பிறகு இந்த செயலை மேற்கொள்ள வேண்டும். 
ஒரு முறை அழித்துவிட்டால் அந்த கோப்பினை பெறுவது கடினம். 
இதுபோன்று பல்வேறு வசதிகளைக் கொடுக்கும் சி-கிளீனர் மென்பொருளைப் மேலும் அறிய
நன்றி. 
Tags: C-cleaner, computer cleaner, computer cleaner software, drive cleaner, computer drive cleaner, registry cleaner, windows register cleaner, free c-cleaner software, activities of cleaner, usage of cleaner in computer, free uninstaller, free uninstall program, uninstall program c-cleaner, unwanted file cleaner, unwanted software cleaner, disk drive cleaner. cookies cleaner, cookies remover.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments