இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு (World Internet Users) வயது கட்டுப்பாடு இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலை தற்பொழுது உள்ளது.
இதனால் பல ஆபத்துகள் தொடர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள் – மாணவர்கள் பாதை மாறி போவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
சிறார்களுக்கு இயல்பாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இணையத்தை பயன்படுத்துகையில் கூடுதலாக இருக்கும்.
மேலும் மேலும் அவர்கள் இணையத்தில் நேரம் செலவழிக்கும்போது தான் பிரச்னையின் வீரியம் அதிகமாகிறது. காரணம், அவர்களின் மனதை கெடுக்கும் பல விஷமத்தனமான இணையத்தளங்கள், விளம்பரங்கள்.
அவைகள் என்ன என அவர்கள் தேடும்போது, இயல்பாகவே அதுகுறித்த ஆர்வமும் ஒட்டிக்கொள்கிறது.
இணையத்தில் பல்கி பெருகிவரும் ஆபாசத் தளங்கள், வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ள இணையதளங்கள் போன்றவை மிக ஆபத்தானவை. அவற்றில் மனம் ஈடுபடத் தொடங்கிவிட்டால், அவர்களை மீட்டுக்கொண்டுவருவது மிக கடினம்.
அவர்கள் இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கவும் முடியாது. அதே சமயம் அருகில் உட்கார்ந்து அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கவும் முடியாது.
இந்நிலையில் உதவக் கூடிய புரோகிராம்தான் பேரண்டல் கன்ட்ரோல் புரோகிராம்.
இணைய பாதுகாப்பு வழங்கும் சில புரோகிராம்கள் :
- ContentWatch Net Nanny 7
- Symantec Norton Family Premier
- Kaspersky Safe Kids
- Circle With Disney
- Mobicip
- Qustodio Parental Control 2015
- Clean Router
- OpenDNS
- Home VIP
- uKnowKids Premier
- SafeDNS
வளரிளம் பருவத்தினர்கள் தேவையில்லாத இணையதளங்களை அணுகுவதைத் தவிர்க்க, அவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து தடுக்க இது பயன்படுகிறது.
இம்மென்பொருள்கள் பெற்றோர்களைப் போன்று குழந்தைகள் ஆபாச மற்றும் வன்முறைத் தளங்களைப் பார்ப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் இதற்கு பேரண்டல் கன்ட்ரோல் சாப்ட்வேர் என்று பெயர்.
இது போன்ற மென்பொருட்கள் பல உண்டு. அவற்றில் நாம் இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளவிருக்கும் மென்பொருள் K9 Web Protection. இம்மென்பொருள் குழந்தைகளின் இணையச்செயற்பாட்டை கட்டுப்படுத்துகிறது.
3. 50 வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வலைத்தளங்களை வகைப்படுத்தி, அவற்றை சிறார்கள் காண முடியாத வண்ணம் Block செய்கிறது.
Download Link
K9 Web Protection மென்பொருளை தரவிறக்கம் செய்திட சுட்டி:
Tags: computer tips, child protection, parental software, parental control