Tuesday, December 24, 2024
HomeFree softwareAvira Antivirus software புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

Avira Antivirus software புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணனிக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avira Antivirus Software.

தற்பொழுது புதிய பதிப்பைக் (Avira New Version 2014) கண்டிருக்கும் இம்மென்பொருள் உங்கள் கணினியை முழுவதுமாக பாதுகாக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை திருடும் Virus, Malware, போன்றவற்றை தடுத்து, உங்களுக்கான Privacy பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இம்மென்பொருள் இலேசானதும் , சக்திமிக்கதாகவும் உள்ளது. இது 1. Real-Time malware detection,  2. pop-up blocker, 3. privacy tools மற்றும் தேடல்முடிவுகளுக்கான 4. safety ratings போன்றவற்றை வழங்குகிறது.

Avira-antivirus-software-with-Advanced-Real-Time-Protection

Features of Avira antivirus – மென்பொருளின் சிறப்புகள்: 

1. Advanced Real-Time Protection
இது அவிரா ஆன்டி வைரசின் புதுமையான கண்டறிதல் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் அனைத்துவிதமான தீங்கிழைக்கும் வைரஸ்களை எளிதாக கண்டறிந்து தடுக்கிறது.

2. AntiAd/AntiSpyware
இந்த நுட்பமானது தேவையில்லா விளம்பரங்களைக் கொடுக்கும் Adware மற்றும் ஆன்லைனில் தனிப்பட்ட தகவல்களை திருடும் புரோகிராம்களை தடுக்கிறது.

3. Browser Tracking Blocker
இந்த நுட்பமானது  இலவச தேடல் கருவிப்பட்டைகள்   (Free Browser tool bar) உங்களுடைய ஆன்லைன் நடவடிக்கைகளை பதிவு செய்வதை தடுக்கிறது.

4. Website Safety Advisor
இந்த வசதியானது, நீங்கள் இணையத்தில்  தேடும் தேடல் முடிவுகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளை (Safety Ratings) வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையான நம்பகமான தேடல் முடிவுகளை கண்டறிய முடியும்.

Avira Antivirus software இவலசமாக தரவிறக்கம் செய்ய சுட்டி: 

Download Avira Antivrius Software for Free

கட்டணம் செலுத்தியும் மேலதிக வசதிகளுடன் Avira antivirus software இணையம் வழியே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

நன்றி.

Tags: free antivirus, free antivirus software, free Avira software, free antivirus Avira new version, Avira 2014.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments