Wednesday, November 13, 2024
HomeFree softwaresகம்ப்யூட்டர் அதி விரைவாக தொடங்குவதற்கு மென்பொருள் !

கம்ப்யூட்டர் அதி விரைவாக தொடங்குவதற்கு மென்பொருள் !

கம்ப்யூட்டர் ஆமை வேகத்தில் தொடங்குவதை எவருமே விரும்ப மாட்டார்கள். சில நேரங்களில் அதிக மென்பொருட்களை பாவித்தல், வைரஸ் தொற்றுகள், அதிக கோப்புகளை உள்ளடக்கியிருத்தல் போன்ற காரணங்களுக்காக கம்ப்யூட்டர்/கணினி மிக மெதுவாக தொடங்கும். அதிக நாட்களாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினியில் இதுபோன்ற பிரச்னை உருவாவது இயல்பானதுதான்.

ஆனால் அப்படி மிக மெதுவாக கணினி தொடங்கும்போது பணி புரிவதற்கான ஆவல் குறைந்து, ஒரு வித மன ஒவ்வாமை ஏற்படும். அவற்றிலிருந்து விடுபட்டு, அது போன்ற பிரச்னையை சரி செய்து உங்கள் கணினியை அதி விரைவாக தொடங்கிட உதவுகிறது இம் மென்பொருள்.

மால்வேர் பைட்ஸ் – மென்பொருள் 

கணினியை வேகமாக START UP செய்திட இம் மென்பொருள் உதவுகிறது. இது கணினியில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷன்களை Elimination செய்து, கம்ப்யூட்டர் இயங்குவதற்கு என்ன தேவையோ, அந்த புரோகிராம்களை மட்டும் இயங்கச் செய்கிறது. இதனால் கனிணிக்கு தேவையில்லாத பணிச்சுமை குறைந்து, மிக இலகுவாக தொடங்கி செயல்படுகிறது.

free-software-for-quick-startup-pc
மென்பொருளை பயன்படுத்துவது சுலபம்தான். கீழுள்ள சுட்டியின் வழியாக தரவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளவும். பிறகு மால்வேர் பைட்டினை தொடங்கி, அது காட்டும் வழிகாட்டுதல் படி ஒரு சில கிளிக்குகள் செய்தால் போதும். உங்களுடைய மீண்டும் புத்துணர்வு பெற்று முன்பைவிட மிக நன்றாக தொழிற்பட ஆரம்பித்துவிடும். 
மென்பொருளைப் பற்றி ஆங்கிலத்தில்: 

No one likes waiting for their computer to start – it’s like watching paint dry (or golf). We at Malwarebytes know that you have places to go and websites to see so we created a lightweight and user-friendly way to speed up your start.

StartUpLITE provides a safe, easy, and efficient way to eliminate unnecessary applications that start when you turn on your computer.

By disabling or removing unnecessary entries, StartUpLITE can dramatically shorten your startup time with just a few clicks of the mouse. Stop waiting and start computing.
மால்வேர்பைட்ஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: 
Tags: quick startup, computer quick startup, pc quick startup, free software, software for quick startup.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments