Monday, December 23, 2024
Homeblogger tipsபிளாக்கர் தளம் வேகமாக திறக்க ட்ரிக் (வீடியோ)

பிளாக்கர் தளம் வேகமாக திறக்க ட்ரிக் (வீடியோ)

ப்ளாக்கர் : 
இலவசமாக கிடைக்கும் Blogging Platform இது. இதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி, உங்களது எண்ணங்களை எழுத்துக்களாக (கட்டுரைகளாக) தொகுத்து வெளியிடலாம். 

இதுபோன்று ஆரம்பித்து பலர் ப்ளாக்கர் தளத்தில் எழுது வருகின்றனர். அவ்வாறு தொடங்கப்பட்ட ப்ளாக்கர் தளங்கள் விரைவாக திறக்கு சில ட்ரிக்ஸ் உண்டு. அவற்றைப் பயன்படுத்தினால் ப்ளாக்கர் தளம் விரைவாக திறக்கும். 

பிளாக்கர் தளங்கள் வேகமாக திறக்கச் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை உண்டு. அவற்றில் முக்கியமானவை.

1. பிளாக்கர் xml Compressing.

பிளாக்கர் தளத்திற்கான xml  கோப்பை கம்ப்ரஸ் செய்து, பயன்படுத்துவதன் மூலம் பிளாக்கர் தளம் வேகமாக திறக்கச் செய்யலாம்.

blogger-xml-code-compressing-online-for-fast-loading

ப்ளாக்கர் தளம் வேகமாக திறக்க செய்யும் வழிமுறை:

  1. உங்கள் பிளாக்கர் கணக்கில் உள் நுழைந்துகொள்ளுங்கள். 
  2. Template என்பதை கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் பக்கத்தில் Backup/Restore என்பதை கிளிக் செய்து, Download Template கொடுத்து டெம்ப்ளேட்டினை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  4. பிறகு Edit HTML கொடுக்கவும்.
  5. தோன்றும் நிரல்வரிப் பெட்டியில் ரைட் கிளிக் செய்து Select All கொடுக்கவும்.
  6. காப்பி செய்யவும்.
  7. http://htmlcompressor.com/compressor/ இந்த தளத்திற்கு செல்லவும்.
  8. தளத்தில் உள்ள பெட்டியில் காப்பி செய்த நிரல் வரிகளை Past செய்யவும்.
  9. கீழிருக்கு Compress பட்டனை அழுத்தவும். 
  10. ஓரிரு வினாடிகளில் உங்களுடைய xml நிரல்வரிகள் கம்ப்ரஸ் செய்யப்பட்டு கிடைக்கும். 
  11. (எந்தளவிற்கு கம்ப்ரஸ் செய்யப்பட்டது போன்ற விபரங்கள் வலது பக்கத்தில் உங்களுக்கு காண்பிக்கப்படும். )
  12. Compress செய்யப்பட்ட நிரல்களை கீழிருக்கும் select all பட்டனை கிளிக் செய்து காப்பி செய்துகொள்ளுங்கள்.
  13. மீண்டும் பிளாக்கர் தளத்திற்கு வந்து ஏற்கனவே இருக்கும் நிரல்வரிகளை அனைத்தையும் நீக்கிவிட்டு, புதியதாக கம்ப்ரஸ் செய்யப்பட்ட நிரல்வரிகளை பேஸ்ட் செய்யவும். 
  14. இப்பொழுது Save Template கொடுத்து சேமிக்கவும். 

முன்பு இருந்ததைவிட உங்களுடைய பிளாக்கர் தளம் இப்பொழுது வேகமாக திறக்கும்.

புதியவர்கள் வீடியோவைப் பார்க்கவும்.


நன்றி.

– சுப்புடு

RELATED ARTICLES

Most Popular

Recent Comments