Tuesday, December 24, 2024
HomeFree softwareலீனக்ஸ் கம்ப்யூட்டருக்கு ஆன்டி வைரஸ் !

லீனக்ஸ் கம்ப்யூட்டருக்கு ஆன்டி வைரஸ் !

linux computer

லீனக்ஸ் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களுக்கு ஆண்டி வைரஸ் தேவையா என்ற கேள்விக்கு, கட்டடாயம் தேவைப்படுகிறது என்ற பதிலை விடையாக கூறலாம்.

தற்பொழுது உள்ள கணினி தொழில்நுட்பத்தில் ஒரே கணினியில் வெவ்வேறு இயங்குதளங்களைப் பயன்படுத்திட இயலும்.

ஒரே கணினியில் விண்டோஸ் மற்றும் லீனங்ஸ் இயங்குதளங்களை நிறுவி, விருப்பபடும் இயங்குதளத்தை இயக்கி கணினியில் பணியாற்றலாம்.

இவ்வாறு ஒன்றுக்கும்மேற்பட்ட இயங்குதளங்களைப் பயன்படுத்தும் கணினிகளுக்கு கட்டாயம் ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவைப்படுகிறது.

லினக்ஸ் கணினியை வைரஸ் பாதிக்காது என்றாலும், அக்கணினியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் கோப்புககளில் வைரஸ் இருக்கலாம்.

எப்படி என்றால், லீனக்ஸ் – விண்டோஸ் பயன்படுத்தும் கணினியில் பைல் ஷேரிங் வசதி, பென்டிரைவ், இணையம் என பல்வேறு வழிமுறைகளில் அந்த கணினுக்கு வைரஸ்கள் வந்திருக்கலாம். வைரஸ் வந்துள்ள கோப்புகளை மற்றவர்களுக்கு பென்டிரைவின் மூலம் கொடுத்திடும்பொழுது, அங்கு பாவிக்கபடும் கணினியில் அந்த வைரசானது சென்றுவிடும்.

எனவே லீனக்ஸ் பயன்படுத்தும் கணினிகளுக்கும் கண்டிப்பாக ஆண்டி வைரஸ் பயன்படுத்துவது நல்லது.

எந்தெந்த ஆண்டி வைரஸ் மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்?

தற்பொழுது முன்னணி வகிக்கும் Avira, AVG, Kaspersky, Avast போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் லினக்சிற்கும் வழங்குகின்றன.

அந்தந்த மென்பொருள் நிறுவனங்களின் வலைத்தளத்திற்குச் சென்று லினக்சிற்கான ஆண்டி வைரஸ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திடலாம்.

குறிப்பு: நீங்கள் எந்தவொரு கணினியிலும் பயன்படுத்திடும் ஆண்ட்டி வைரஸ் மென்பொருளினை அப்டேட் செய்துகொள்வது முக்கியம். அவ்வப்பொழுது கிடைத்திடும் இலவச அப்டேட்களைச் செய்துகொள்வதன் மூலம் புதிய வைரஸ்களிலிருந்து உங்களது கணனியைப் பாதுகாத்திடலாம்.

நன்றி.

Tags: Antivirus, Linux, Windows, Avira, AVG, Kaspersky, Avast, Antivirus software, computer, protection.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments