Sunday, December 22, 2024
HomeUseful sitesஆன்லைனில் Tamil FM Radio கேட்டு மகிழ

ஆன்லைனில் Tamil FM Radio கேட்டு மகிழ

ஒரு காலத்தில் திருச்சி வானொலி நிலையமும், சென்னை வானொலி நிலையமும் மட்டும் பாப்புலராக இருந்தது. அதற்கு அடுத்து சிலோன் ரேடியோ எனப்படும் இலங்கை வானொலி மட்டுமே மிக சாமான்யர்களுக்கும் விரும்பிக் கேட்கும் வானொலி நிலையங்களாக இருந்தன.

ஆனால் தற்பொழுது வீட்டிக்கு வீடு, ரோட்டுக்கு ரோடு என்று பண்பலை வானொலிகளான FM Radio க்கள் வந்துவிட்டன. இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்பவர்களுக்கு FM Radios கள் ஒரு வரப்பிரசாதமாகவே மாறிவிட்டன.

அதுபோல 24 மணி நேரமும் இயங்கும் இணைய வானொலிகளும் தற்பொழுது பெருக ஆரம்பித்துவிட்டன. கம்ப்யூட்டரில் இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்பவர்கள் முதல், பகலில் வேலை  செய்பவர்கள் வரை பணிக்கிடையே ஜாலியாக கேட்க விரும்பும் வானொலி FM Radios.

அந்த வகையில் இணையத்தில் ஒலிப்பரப்படும் வானொலிகளை ஒரே இடத்தில் கேட்டு மகிழ http://www.minthirai.com/ என்ற இணையதளம் உதவுகிறது.  இத்தளத்தில் 50 ஆன்லைன் தமிழ் FM கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான எப்.எம். ரேடியோக்களை கிளிக் செய்து கேட்டு மகிழலாம்.

மொபைலிலும் ஆன்லைன் எப்.எம். ரேடியோக்களை கேட்டு மகிழலாம். அதற்கு ப்ளைகாஸ்ட் (Fly Cast) என்ற புரோகிராம் பயன்படுகிறது. இந்த புரோகிராமை தரவிறக்கம் செய்து மொபைலில் நிறுவி, பின்னர் தமிழ் எப்.எம். ரேடியோக்களை தேடி, கேட்டு மகிழலாம்.

நீங்களும் ஆன்லைனில் FM Radio தொடங்கலாம். அதற்கு shoutcast என்ற இணையதளம் உதவுகிறது. இத்தளத்தில் ஒரு ஆன்லைன் எப்.எம் எப்படி தொடங்குவது என்பது குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளது. ஆன்லைனில் எப்.எம். ரேடியோ கேட்க நினைப்பவர்கள் இத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி Online FM Radio தொடங்கலாம்.

நன்றி.

Tags: FM Radio, Tamil FM, Tamil FM RAdio, Online FM Radio, Tamil Online FM, Tamil FM in internet.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments