Monday, December 23, 2024
Homeonline money makingபணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

பணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

பணம் பத்து செய்யும் என்பது பழமொழி. அந்த பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது.
அதுபற்றிய விபரங்களைத்தேடியபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Cost-of-Printing-Currency-in-India

ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
47 பைசா
பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
96 பைசா
இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
1 ரூபாய் 46 பைசா
ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
1 ரூபாய் 81 பைசா
நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
1 ரூபாய் 79 பைசா
500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
3 ரூபாய் 58 பைசா
ஆயிரம்  ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
4 ரூபாய் 6 பைசா

இதில் குறிப்பிடத்தக்க ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் 100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவிடை 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.

எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது. இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய  கிழிந்த பணத்தாள்களை வாங்கிக்கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள். ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும்.

அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாக மாற்றிவிடுவார்கள்.

ரூபாய் நோட்டுக்கள் கிழிவதையும், சேதமடைவதையும் தடுக்க இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve bank of India.

ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லையென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும். நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம், நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கப்படுகின்றன.

இதுபற்றி ஆங்கில நாளிதழ் “The Times of India” நாளிதழில் வெளியான செய்தி குறிப்பு கீழே.

It costs money to make money. Last year, the Reserve Bank of India spent Rs 2,376 crore on printing 16.5 billion currency notes of varied denominations and the tab is only set to rise.

Of all the notes minted, Rs 1,000 costs the least, at Rs 3.17 per note. But the five-rupee note, the smallest in terms of size and denomination, costs the most, 48 paise, compared to the value of the note.

The number of notes printed has risen consistently. “Inflation remained high, often in double digits, in respect of commodities such as foodgrain, pulses, fruits and vegetables, and milk during 2009-10 and 2010-11 – where transactions are expected to be cash- intensive,” the RBI said in its annual report for 2010-11.

நன்றி.

– சுப்புடு
Tags: Indian currency, cost of Indian currency note, expenses of Indian currency paper, Reserve bank, Indian coins.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments