Thursday, January 23, 2025
HomeAndroidபெண்கள் பாதுகாப்பிற்கு உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் ! சென்னை மாணவன் அசத்தல் !

பெண்கள் பாதுகாப்பிற்கு உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் ! சென்னை மாணவன் அசத்தல் !

14 வயது சிறுவனின் Android App:

சென்னையைச் சேர்ந்த பதினான்கே வயதான சிறுவன், ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்.

அப்ளிகேஷனில் SOS Mode பயன்படுத்துகையில், மொபைலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மொபைல்களுக்கு, தான் இருக்கும் இடத்தின் விபரங்களைக் கொடுத்து விழிப்பூட்டல் SMS களை அனுப்புகிறது.

Arjun-invention-safty-Android-apps-for-women-and-school-bus-locator-for-parents

உள்ளூரில் ஆபத்தில் இருக்கும் நபர் ஒருவர் போலிசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும் ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளையும் அவர் இப்போது செய்து வருகின்றார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அர்ஜூன் இந்த பயன்மிக்க அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு மாச்சூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிகேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez School Bus Locater என்ற அப்ளிகேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் அப்ளிகேஷனின் பயன்: 

இந்த அப்ளிகேஷன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளளி பேருந்தின் இடத்தைத கண்காணிக்கவும், மற்றும் வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றி கணக்கிட உதவுகிறது.

சாதாரண போன்களிலும் இந்த அப்ளிகேஷனை SMS மூலம் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு. MIT-ல் ஏற்பாடு செய்திருந்த Application Inventor bug finding போட்டியில் அர்ஜூன் வெற்றிப் பெற்றுள்ளார்.

அர்ஜூனின் எதிர்கால கனவு “Lateralogics”

அர்ஜூனின் எதிர்கால கனவு “Lateralogics”  என்ற ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் . அதாவதுகூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களைப் போன்றதொரு நிறுவனமாக அது இருக்க வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கு, தான் Programming Language – களைக் கற்றுக்கொள்ள ஆன்லைனில் நாளொன்றிற்கு மூன்று மணி முதல் நான்கு மணி வரை செலவிடுவதாகவும், அதேபோல பள்ளிப் படிப்பிலும் கவனமாக இருந்து முதல் வகுப்பில் தேர்வதாகவும் அவருடைய தந்தை சந்தோஷ்குமார் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அர்ஜினின் பொழுதுபோக்கு;

புரோகிராமிங் மட்டுமல்லாமல் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுக்களிலும் ஆர்வம் அதிகம் என்று அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: SOS, Lateralogics, Safety APPS for women, Programming Language, SMS

RELATED ARTICLES

Most Popular

Recent Comments