Monday, December 23, 2024
HomeFree softwareஇலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள - Skype புரோகிராம்

இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள – Skype புரோகிராம்

உலகெங்கிலும் வாழும் உங்கள் நண்பர்கள் மற்றும் வியாபார ரீதியான நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படும் புரோகிராம் இது.

இது முற்றிலும் இலவசமானது. இந்த புரோகிராம் மூலம் அழைப்புகளை மேற்கொள்வதற்கு ஒரு நிபந்தனையை நிறைவு செய்திருக்கவேண்டும்.

அழைப்புகளை மேற்கொள்ள இருக்கும் இருவரும் ஸ்கைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.

skype-program-for-all-communications-devices-2014

ஸ்கைப் அக்கவுண்ட் இருக்கும் இருவர் ஒருவருக்கொருவர் Skype Program மூலம் கம்ப்யூட்டர், மொபைல், ஹோம் போன், டி.வி., மற்றும் தகவல் தொடர்ப்புக்குப் பயன்படும் சாதனங்களின் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தி இலவசமாக பேச முடியும்.

இப்புரோகிராமானது PEER-TO-PEER என்ற Technology அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. அழைப்புகளை மேற்கொள்ளும் இரு கணினி பயனர்களும், எந்த இடைத்தரகு சர்வரும் இல்லாமல் பேசிக்கொள்ள முடியும் என்பது இந்த டெக்னாலஜியின் சிறப்பு.

அழைப்புகளை ஏற்படுத்த விரும்பும் நபர்களின் Dial Number அல்லது அவரின் SKYPE ID (Contact Name) இருந்தால் போதும். அவற்றைப் பயன்படுத்தி, உடனடியாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ஒரு கம்ப்யூட்டலிருந்து, வேறொரு இடத்திலிருக்கும் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு பயன்படும் மென்பொருள்

இலவசமான அழைப்புகளை ஏற்படுத்த பயன்டும் இந்த புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்ட்டால் செய்து வைத்திருக்க வேண்டும். (தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

முக்கியமான அழைப்புகளை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தால், புரோகிராமினை இயக்கி, பேசுவதற்கான Head Set -ஐயும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்:

  • எவ்வளவு தூரத்திலிருந்தாலும், எங்கிருந்தாலும், எந்த நேரத்திலும் நண்பர்களை தொடர்புகொண்டு பேச முடியும்.
  • இந்த புரோகிராமில் Tex Chat செய்ய முடியும்.
  • நண்பர்கள் ஆன்லைனில் இல்லாதபொழுது அவர்களுக்கு Voice Message வசதியைப் பயன்டுத்தி , முக்கியமான தகவல்கள் பேசி அனுப்ப முடியும். அவர்கள் ஆன்லைனில் வரும்பொழுது அந்த செய்தி கேட்க முடியும்.
  • உரையாடும்பொழுது அவைகள் encryption செய்யப்படுவதால் இடையில் யாரும் உங்களது உடையாடல்களை கேட்க முடியாது. பாதுகாப்பான உடையாடல்களை மேற்கொள்ளலாம்.
  • இந்த புரோகிராமின் மூலம் fixed-line phones களுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பது கூடுதல் வசதி.

இது Windows Operation system -ல் சிறப்பாக செயல்படுகிறது.
Mac மற்றும் Linux Operation system கம்ப்யூட்டர்களுக்கும் Skype புரோகிராம் உண்டு.

Windows Operation system கம்ப்யூட்டருக்கான SKype மென்பொருள் தரவிறக்கம் செய்ய சுட்டி:

Download Skype for Windows Computer

மேலும் இந்த புரோகிராமானது, Windows Phone, Android, iPhone, Blackberry போன்ற Mobile களுக்கும், Tablet, Tv, Home Phones, மற்றும் வேறு சில தகவல்தொடர்பு சாதனங்களுக்கும் கிடைக்கிறது. ஒரு ஸ்கைப் அக்கவுண்ட் உங்களிடம் இருந்தால் போதும். அதைப் பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட பல்வேறு சாதனங்களிலும் அந்த அக்கவுண்டையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

In English:

This free program will allow you to make calls to your friends and business partners living in any country of the world. The main condition of your communication is the presence of both parties’ registration in Skype.
The program is based on technology PEER-TO-PEER, which implies no need for the intermediary as a server when connecting. You’ll only have to dial a number or name and you contact directly with the computer or phone of your interlocutor immediately.
You will have free communicating with people important to you. The program is to be installed on your PC, but you also need to activate headset which is necessary for communication.
Main features:
Unrestricted by time and distance communication with dear people for free
Excellent voice quality information on any of the channels
A text chat
Secrecy of communication due to encryption of conversations
Ability to make calls to fixed-line phones

RELATED ARTICLES

4 COMMENTS

  1. நிச்சயமாக ஸ்கைப் மென்பொருள்தான். வெளிநாடுகளிலிருந்து Skype to Skype இணைய இணைப்புள்ள இரு கணினிகளுக்கிடையே இலவசமாக உரையாடலாமே..! அதைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். நன்றி.

Comments are closed.

Most Popular

Recent Comments