Wednesday, January 22, 2025
Homefree video converterஒரு நொடிகளில் வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள் !

ஒரு நொடிகளில் வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள் !

There are plenty of video converter software available in internet. But one of the best software is free video make converter. It has much more options to convert various format suitable for all devices like android, apple iOS , smart TV, tablets.

உங்களிடம் உள்ள வீடியோவை வேறு ஒரு பார்மட்டிற்கு மாற்றிட பயன்படுகிறது வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள். இணையத்தில் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் வீடியோவாகட்டும் அல்லது செல்போன், வீடியோ கேமிரா வழியாக ரெக்கார்ட் செயப்பட்ட வீடியோ ஆகட்டும், எந்த ஒரு வீடியோவையும் நீங்கள் விரும்பிடும் Video Format க்கு மாற்றிடலாம்.

video converter freemake


ஸ்மார்ட்போன், டேப்ளட், லேப்டாப், ஸ்மார்ட் டிவி என்று வீடியோ பார்க்க பல்வேறுபட்ட சாதனங்கள் வந்துவிட்டன. அதனால் கட்டாயம் அந்தந்த சாதனங்கள் சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டில் இருந்தால் மட்டும் வீடியோவை அதில் Play செய்ய முடியும். குறிப்பாக ஆன்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற ஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட பார்மட்கள் மட்டுமே சப்போர்ட் ஆகும். அதுபோன்ற சமயங்களில் வீடியோ கன்வர்ட் அவசியமாகிறது. 
இணையத்தில் இலவசமாக வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள் கிடைக்கிறது. அவற்றில் FreeMake Video Converter மிக சுலபமாக வீடியோ பார்மட் மாற்றிட பயன்படுகிறது. அதே சமயம் அதில் அதிக வசதிகள் இலவசமாகவே கிடைக்கிறது. குறிப்பாக வீடியோ எடிட்டிங் அதன் மூலம் செய்திடலாம். வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை “கட்” செய்து சேமித்துக்கொள்ளலாம். 
அந்த வகையில் ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர் video editor ஆகவும் செயல்படுகிறது. 
இதில் DVD Burn செய்திடும் வசதியும் உள்ளது. அதாவது உங்களிடம் உள்ள DVD Player ல் பயன்படுத்தக்கூடிய DVD டிஸ்க்குகளில் வீடியோவை பதிய முடியும். இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்க கூடிய டிவிகளில் வீடியோவை பார்த்திட முடியும். 
இம்மென்பொருள் மூலம் AVI, MP4, WMV, MKV, SWF, 3GP, DVD, MPEG, MP3, iPod, iPhone, PSP, Android, rip போன்ற பார்மட்களில் மாற்றிக் கூடிய வசதிகள் உண்டு. 

மேலும் இதில் Burn Blu-Ray வசதி, யூடியூபிற்கு வீடியோக்களை Upload செய்யும் வசதி ஆகியனவும் உண்டு.

28.21 MB அளவுள்ள இம்மென்பொருள் Windows XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64 போன்ற விண்டோஸ் கணினிகளில் இயங்குகிறது. பல மொழி ஆதரவு உண்டு (Multi Language Support) .

இது ஒரு Freeware. ஆகையால் எந்த ஒரு கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும்.

ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர் டவுன்லோட் செய்ய  சுட்டி :
Download Freemake Video Converter latest version 4.1.3.11

ப்ரீமேக் வீடியோ கன்வெர்ட்டர் இடம்பெற்றுள்ள வசதிகள் பற்றிய கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள இந்த பதிவை வாசிக்கவும்.

ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருளின் சிறப்புகள்

Tags: Freemake video converter, video converter for free, freemake DVD burner, free video converter.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments