கம்ப்யூட்டரில் உள்ள மிகப்பெரிய பைல்களை கம்ப்ரஸ் செய்ய பயன்படும் ஒரு முக்கியமான புரோகிராம் WinRAR புரோகிராம்.
வின்ரேர் புரோகிராமினைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் உள்ள மிகப்பெரிய கோப்புகளை கம்ப்ரஸ் செய்து சிறிய கோப்புகளாக மாற்ற முடியும்.
அவ்வாறு செய்யும்பொழுது கோப்புகள் கம்ப்ரஸ் செய்யப்பட்டு, அதனுடைய அளவுகள் குறைக்கப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டரில் உள்ள Hard Disk -ல் அதிக கோப்புகளை சேமிக்க முடியும்.
கம்ப்யூட்டரில் வின்ரேர் மென்பொருள் கொண்டு கோப்புகளை கம்ப்ரஸ் செய்து பயன்படுத்துவதைப் போன்றே, தற்பொழுது ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பைல்களை Compress செய்து சேமிக்க முடியும்.
கம்ப்ரஸ் செய்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளை Extract செய்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து, அதிலுள்ள கோப்புகளை பயன்படுத்த முடியும்.
வின்ரேர் மென்பொருள் சப்போர்ட் செய்யும் பார்மட்கள் இவை: RAR, ZIP, TAR, GX, BZ2, XZ, 7Z, ISO மற்றும் ARJ archives.
மேற்குறிப்பிட்ட பார்மட்களில் கோப்புகள் கம்ப்ரஸ் செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை இதே வின்ரேர் மென்பொருளைப் பயன்படுத்தி மீண்டும் Extract செய்து பயன்படுத்தலாம்
அதேபோல் மேற்குறிப்பிட்ட பார்மட்டில் பைல்களை மாற்றி கம்ப்ரஸ் செய்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷனில் உள்ள சிறப்பம்சங்கள் (ஆங்கிலத்தில்).
Specifications of WinRar Program
- Compress and Extract RAR files within Android
- Unpack RAR, ZIP, TAR, GZ, BZ2, XZ, 7z, ISO and ARJ archives.
- Additional Support for ZIP files and supports ZIPX with BZIP2, LZMA and PPMd compressions Unrar support extended for RAR5, UDF and ISO9660 files also.
- You can set a password before archiving
- It supports multiple languages.
- It uses multiple CPU cores to compress data for quick process.
- You can repair damaged files
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி அதிக கொள்ளவு கொண்ட Video files, Image Files, Documents போன்றவற்றை ஆண்ட்ராயட் போனிலேயே கம்பரஸ் செய்து, கம்ப்ரஸ் செய்யப்பட்ட கோப்புகளை நண்பர்களுக்கு இமெயில் அனுப்பலாம்.
அவ்வாறு அனுப்பட்ட கோப்புகளை, ஆண்ட்ராய்ட் போனிலேயே டவுன்லோட்செய்து, அவற்றை வின்ரேர் மென்பொருளின் மூலம் விரித்து (Extract) ஒரிஜினல் கோப்புகளைப் பெற்று பயன்படுத்த முடியும்.
பைல்களை ஏன் சுருக்க வேண்டும்?
கோப்புகளை சுருக்குவதால், அதனுடைய அளவு மிக குறைவாக மாறுகிறது. குறைந்த கொள்ளளவு கொண்ட கோப்புகளை மிக எளிதாக நண்பர்களுக்கு இமெயில் செய்ய முடியும்.
அத்தோடு குறைந்த அளவு கொள்ளவு கொண்ட ஸ்மார்ட் போன் மற்றும் மெமரி கார்ட்களிலும் கோப்புகளை Rar கோப்புகளாக கம்ப்ரஸ் செய்து அதிகமான கோப்புகளை அதில் சேமித்து வைக்கலாம். வேண்டியபோது அதை விரித்துப் பயன்படுத்தலாம்.
பயன்மிகுந்த ஆண்ட்ராய்ட் போனுக்கான WinRar App டவுன்லோட் செய்ய சுட்டி: Download WinRar app for Android Smartphones
Tags: winrar app, android winrar app, winrar app for android phones.