Monday, December 23, 2024
Hometech news10 வயது மாணவர்கள் உருவாக்கிய ஆன்ட்ராய்ட் செயலிகள் !

10 வயது மாணவர்கள் உருவாக்கிய ஆன்ட்ராய்ட் செயலிகள் !

பள்ளியில் 10 வயது நிரம்பிய மாணவர்கள் புதிதாக 7 ஆன்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கியுள்ளனர்.

பெரம்பூரில் உள்ள KRM Public School மாணவர்கள் புதியதாக 7 ஆண்ட்ராய்ட் மென்பொருட்களை வடிமைத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் டி.பி.சிவசக்தி பாலன் கூறியதாவது:

சாலை பாதுகாப்பு, விதிகள், குறியீடுகள் போன்றவற்றை எளிதாக அறியும் மென்பொருள், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான கணிதப் பாடங்களை வரைபடத்துடன் அறியும் மென்பொருள் என மொத்தம் 7 மென்பொருள்களை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இவற்றில் “கிட்ஸ் ஜர்னலிஸ்ட்’ என்ற தலைப்பில் மாணவர்கள் உருவாக்கிய மென்பொருள் மூலம் கழிவுநீர் கால்வாய் மூடி திறப்பு, உடைந்திருத்தல் போன்ற நகரின் பிரச்னைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் குறைதீர்க்கும் பகுதிக்கு புகைப்படத்துடன் மின்னஞ்சல் அனுப்ப முடியும்.

இந்த மென்பொருள்களை “கூகுள் பிளே’ ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உலகளவில் எல்லாத் துறையிலும் தனித்திறமையுடன் விளங்க வேண்டும் என்பதற்கான பயிற்சியை அளிக்கிறோம்.

அதன் ஒரு பகுதியாக ஆன்ட்ராய்டு மென்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம்.

அதைப் பயன்படுத்தி ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் குழு இந்த மென்பொருள்களை உருவாக்கியுள்ளனர் என்றார் சிவசக்தி பாலன்.

ஆண்டராய்ட் மென்பொருட்களைக் கண்டுபிடித்த மாணவர்களை வாழ்த்துவோம்.

நன்றி.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments