Thursday, January 23, 2025
Hometech newsATM Service கள் பாதிக்கப்படலாம் ! ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை !

ATM Service கள் பாதிக்கப்படலாம் ! ரிசர்வ் பேங்க் எச்சரிக்கை !

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி Windows XP (விண்டோஸ் எக்ஸ்பி) இயங்குதளத்தின் சேவையை எதிர்வரும் ஏப்ரல் 8 ம்தேதியுடன் நிறுத்த உள்ளது.

அரசு சார்ந்த நிறுவனங்கள் ஒரு சில இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்திய வங்கிகள் பலவும் இந்த இயங்குதளத்தையே இன்னும் பயன்படுத்திக்கொண்டிருப்பதால், ATM Service கள் பாதிக்கப்படும் என Reserve Bank எச்சரித்துள்ளது.

windows-xp-sevai-nirutham

இந்நிலையை தவிர்க்க வங்கிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்க்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

Windows XP பயன்பாட்டிற்கு வந்து பதிமூன்று ஆண்டுகாலம் நிறைவடையப்போகிறது. இந்நிலையில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் XP சேவை முற்றிலும் நிறுத்த முடிவெடுத்திருந்தது.

இன்னும் 5 நாட்களே இருப்பதால், அனைத்து வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்கள் தங்களது கணிகளில் உள்ள xp இயங்குதளத்திற்கு பதிலாக புதிய பதிப்பான Windows 8.1-ஐ வாங்கிக்கொள்ளலாம் என கூறியுள்ளது.

புதிய இயங்குதளமான விண்டோஸ் 8.1 பல மேம்படுத்தபட்ட வசதிகளை உள்ளடக்கியுள்ளதால் கணினி பயனர்கள் கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.

Tags: Windows 8.1, Windows XP, Reserve bank, ATM service.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments