Wednesday, January 22, 2025
Hometech newsதவறில்லாமல் எழுத Super tech computer pen

தவறில்லாமல் எழுத Super tech computer pen

pilai-thiruthum-computer-penaசாதாரணமாக நாம் எழுதிடுகையில் பிழை ஏற்படுவது இயல்பு. அதுவும் கற்றுக்கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள் என்றால் நிறைய பிழைகள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்காகவே  குழந்தைகள் தவறில்லாமல் எழுத  Super tech computer pen கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 நண்பர் ஒருவரின் குழந்தை எழுதுவதற்கு சிரம்படுவதைக் கண்ட ஜெர்மணி நாட்டு டேனியல் காஷ்மஷர் என்பவர் நவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த பிழை திருத்தும் பேனா ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

இந்த பேனாவை வைத்து எழுதும்பொழுது, பிழையாக எழுதினால் உடனே அதிர்வு அலைகளை ஏற்படுத்தி பிழையை சுட்டிக் காட்டும்.

இதற்காக இதனுடன் Mini Battery ஒன்றும், மிகச்சிறிய Computer ஒன்றையும் இணைத்துள்ளாராம்.

நண்பனின் குழந்தைக்காக இப்பேனாவினை கண்டுபிடித்தாலும், அனைத்து குழந்தைகளும் இப்பேனா பயன்படும் என்று அவர் கூறினார்.

இனி, குழந்தைகள் தவறாக எழுதுவிடுவோமோ என்ற கவலைபடத் தேவையே இல்லை.  அவர்கள் தவறில்லாமல் எழுத Super tech computer pen பேனா பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இதை பள்ளியில் அனுமதிப்பார்களா என்றுதான் தெரியவில்லை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments