Sunday, December 22, 2024
Hometech newsதானியங்கி கார்; கூகிள் சாதனை

தானியங்கி கார்; கூகிள் சாதனை

இன்டர் நெட் உலகின் முடி சூடா மன்னன் கூகிள். இது தரும் வசதிகள் பல. கூகிள் கண்ணாடி. ஹீலியம் பலூன் மூலம் மலைப்பாங்கான பகுதிகளுக்கும் இன்டர்நெட், போன்ற அதி நவீன வசதிகளை வழங்கிக்கொண்டு வருகிறது.

அந்த வகையில்தான் இதுவும். டிரைவரே இல்லாமல் ஒரு வாகனத்தை அமெரிக்காவின் முக்கியமான நகரான சான்பிரான்சிஸ்கோ சாலைகளில் 1,60,934 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சாதனை செய்துள்ளது.

டிரைவர் இல்லாமல்,  ரோபோட்டும் இல்லாமல் இந்த சாதனையை செய்துள்ளது.

Googles-Self-Driving-car-in-the-street-roads

படக் கருவிகள், கணிப்பான்கள் (RADAR), மற்றும் நுண்கதிர் உணர்விகள் (Laser) ஆகியவற்றின் உதவியுடன் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த சாதனை வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிலும் இதுபோன்ற தானியங்கி வாகங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இலண்டனில் உள்ள அறிவியல் பூங்கா ஒன்றில் இதுபோன்ற ஆளில்லா வாகன சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் வாக நிறுவனத்துடன் இணைந்து இதுபோன்ற தானியங்கி வாகனங்களை அமைத்துள்ளனராம்.

ஆளில்லாத வாகனங்களால் என்ன பயன்?

இதுபோன்ற ஆளில்லாத வாகனங்களால் என்ன பயன் என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஆளிருக்கும் வாகனத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும்போது, ஆளில்லாத வாகனங்களால் அதிக ஆபத்து ஏற்படாதா? என்பவர்களுக்கு பதில் கண்டிப்பாக விபத்து நடைபெறாது என்பதுதான்.

மனித கட்டுப்பாட்டைவிட, இயந்திரக் கட்டுப்பாடு, கணினி கட்டுப்பாட்டில் செயல்படுவதால் விபத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

காரணம் எதிரே வரும் வாகனம் ராடார் மூலம் கணிக்கப்பட்டு, சரியான திசை மற்றும் நகர்வுகளை ஏற்படுத்துவதால் விபத்துக்கு 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று கூறுகிறது இக்கண்டுபிடிப்பு.

முறையாக வாகனம் செலுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

google-kannadi

இங்கிலாந்தில் இதுபோன்ற வாகனங்கள் சோதனை ஓட்டமாக முதலில் கிராம்ப்புற பகுதிகள் மற்றும் ஆள் நெரிசலில்லாத புற நகர்ப்பகுதிகளில் இத்தகைய வாகனங்கள் சோதனை ஓட்டத்திற்கு விடப்பட்டுள்ளனவாம்.

நம்மூர் சாலைகளில் இது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. சாலைகளின் தன்மை அப்படி. இந்தியாவில் இதுபோன்ற ஆளில்லாத, டிரைவில் இல்லாத கார்களைப் பார்க்க இன்னும் நூறு வருடங்களை நாம் கடக்க வேண்டியதிருக்கும்.

கூகிளின் தானியங்கி கார் எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

watch Google’s Self-Driving CAR TEST

RELATED ARTICLES

Most Popular

Recent Comments