சோதனை முயற்சியாக செய்யப்பட்ட கூகிள் கண்ணாடிகளை தற்பொழுது விற்பனைக்குகொண்டு வர முடிவு செய்துள்ளது.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில் கூகிள் கண்ணாடி என்பது அடுத்த கட்ட நகர்வாகும்.
கண்ணெதிரேயே கம்ப்யூட்டரின் திரையில், அன்றாடம் பயன்படுத்தும் இணையப் பயன்பாடுகளைப் பெற முடியும்.
மிகச்சிறிய அளவே உடைய கூகிள் கண்ணாடியை மிக எளிதாக மூக்க கண்ணாடியைப் போல மாட்டிக்கொள்ள முடியும்.
கூகிள் கண்ணாடி பற்றி முழுமையாக அறிய இந்த பதிவைப் படிக்கவும்:
தற்பொழுது கூகிள் கண்ணாடியின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 1500$ ஆகும்.
அமெரிக்காவில் வசிப்பவர்கள் இக்கண்ணாடிகளை வாங்கி, நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.
உலகில் உள்ள நண்பர்களுக்கு இன்டர்நெட் மூலம் தொடர்புகொள்ளலாம்.