Saturday, September 21, 2024
Hometech newsஇந்தியாவில் 4000 விற்பனை மையங்கள் - சாம்சங் திட்டம்

இந்தியாவில் 4000 விற்பனை மையங்கள் – சாம்சங் திட்டம்

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் நான்காயிரத்துக்கும் அதிகமான விற்பனை மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ள இடங்களில் இத்தகைய சாம்சங் விற்பனை மையங்கள் திறக்கப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது.

Samsung-plan-to-open-4000-shops-to-Increase-smartphone-Sales

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மொபைல் நிறுவனங்களான கார்பன், மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன் இத்தகைய கடைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஏற்கனவே இந்தியாவில் 2000 லைசென்ஸ் விற்பனை மையங்கள் இயங்கி வருகிறது. இவற்றால் பாதிக்கும் மேல் Smart Phone விற்பனை மையங்கள். ஸ்மார்ட் போன் மையங்களில் Tablet Pc, Android Smartphone கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

இந்திய விற்பனைச் சந்தையில் 38 சதவிகித பங்கினை கொண்டுள்ள சாம்சங் நிறுவனம், அதனை மேலும் அதிகப்படுத்திட மேற்கொள்ளும் திட்டமாக ரூபாய் 500 கோடி செலவில் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments