Sunday, December 22, 2024
Homefacebook tipsபேஸ்புக் வயது பத்து !

பேஸ்புக் வயது பத்து !

பேஸ்புக் இணையதளம் தொடங்கப்பட்டு பத்து வருடம் பூர்த்தியாகியுள்ளது.

2004 ஆம் வருடம் பிப்ரவரி 4ம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மார்க் சூக்கர்பெர்க் என்பவர் உருவாக்கிய இணையதளம் பேஸ்புக்.

தன்னுடன் படித்த நண்பர்களை இணைக்கும் வித்த்தில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் நாளடைவில், அனைவருக்கும் பயன்படும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டது.

தற்பொழுது பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவராக தன்னை மாற்றிய FaceBook இந்தளவிற்கு வரவேற்பை பெறும் என தான் கனவில் கூட நினைத்ததில்லை என்று மார்க் தெரிவித்துள்ளார்.

மொபைல் சந்தையில் தன்னுடைய கவனத்தை அதிகம் செலுத்தாத போதிலும் கூட, மொபைல் மூலமாகவே தனது பாதிக்கும் மேலான விளம்பர வருவாய் வருவதாக தெரிவித்துள்ளது பேஸ்புக்.

மற்ற சமூக வலைத்தளங்களான Pinrest, Twitter, SnapShot போன்றவற்றின் வரவால் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கருத்தப்பட்டது. என்றாலும், பேஸ்புக்கிற்கான பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments