இதில் இணையப் பயன்பாட்டை மேற்கொள்ள முடியும். 2.8 அங்குல அகலம் உள்ள QVGA LCD திரையை கொண்டுள்ள இப்போனில் 2 மெகா பிக்சல் கொண்ட கேமரா உள்ளது.
நோக்கியா எக்பிரஸ் பிரவுசர், எப்.எம். ரேடியோ, புளூடூத் வசதிகளும் உண்டு.
பேஸ்புக், ட்விட்டர் போன் சமூக தளங்களுக்கான இணைப்புகளும் இதில் தரப்பட்டுள்ளன.
மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 32 ஜி.பி. வரைக்கும் மெமரியை உயர்த்திக்கொள்ளும் வசதி, தொடர்ந்து 21 மணி நேரம் பேசப்போதுமான மின்சக்தியை வழங்கவல்ல 1200 mAh திறனுடைய பேட்டரி இதில் உண்டு.
கிடைக்கும் நிறங்கள்: சிகப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளிவர உள்ளது.
இதன் விலை ரூபாய் 3,500 க்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இணைய இணைப்பு, சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி, போட்டோ-வீடியோ எடுக்கப் போதுமான கேமரா வசதி, கண்ணை கவரும் நிறம், கட்டுக்கோப்பான சீரான மின்சக்தி வழங்கும் பேட்டரி என இந்த போன் உண்மையிலேயே மிடில் கிளாஸ் பேமலிக்கு ஒரு வரப்பிரசாதம்தான்…
ஆங்கிலத்தில் சிறப்பம்சங்கள்:
Nokia 225 dual SIM Phone Main specifications:
- 2.8 Inch LCD Display
- Dual SIM
- 2 MP Camera
- FM Radio
- Bluetooth 3.0
- 32GB Expandable Memory
- 1200 MAh Battery