Wednesday, January 22, 2025
Hometech newsவெயிலை சமாளிக்க AC Jacket !

வெயிலை சமாளிக்க AC Jacket !

A cool new invention for those long, hot summers – a jacket with its own air-conditioning system. 
எதிலும் ஒரு புதுமையை செய்பவர்கள் ஜப்பானியர்கள். சுட்டெரிக்கும் இந்த வெயிலை சமாளிக்க AC Jacket – ஐ கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு தேவையை கருத்தில்கொண்டு, அவற்றை மிக எளிதாக எப்படி செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்து, அதை நேர்த்தியாக செய்பவர்கள்தான் [Perfection] ஜப்பானியர்கள்.

AC Jacket Made in Japan
AC Jacket Made in Japan

அந்த வகையில் கடுமையான வெயிலைச் சமாளிக்க புதிய வகை ஆடையை கண்டுபிடித்துள்ளனர். ஏ.சி. ஜாக்கெட் என்ற பெயரிடப்பட்ட அந்த ஆடையில் இரண்டு மிகச் சிறிய மின்விசிறிகள் [Tiny Fans] பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விசிறிகள் சுழலுவதன் மூலம் வெப்பமான காற்று [hot air] வெளியேற்றப்பட்டு, குளுமையான காற்று [aircondition] ஆடைக்குள் செலுத்தப்படுகிறது.

இந்த ஜாக்கெட்டிற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் Kuchofuku Air Conditioned Jacket.

700 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கும் இதை அணிந்துகொள்வதில் எந்த பிரச்னையும் இருக்காது.

மின்விசிறிகள் இயங்குவதற்கான பேட்டரிகள் அதிலேயே இணைப்பட்டுள்ளன. தேவையானபோது அவற்றை ரீசார்ஜ் செய்துகொள்ளும் வகையில் வடிமைத்திருக்கிறார்கள்.

Kuchofuku Air Conditioned Jacket நம் நாட்டிலும் கிடைத்தால் இந்த கடுமையான வெயிலை சமாளிக்கலாம்.

AC Jacket Video

Tags: Japan’s airconditioned jacket, New airconditioned jacket, AC Jacket Japan. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments