Wednesday, January 22, 2025
HomeCodecஎல்லாவித வீடியோக்களை பிளே செய்ய K-Lite Codec Pack

எல்லாவித வீடியோக்களை பிளே செய்ய K-Lite Codec Pack

விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ பிளேயர்களில் ஒரு சில வீடியோக்கள் பிளே செய்ய முற்படும்பொழுது, Codec இல்லை என்ற பிழைச்செய்தி காட்டும்.

தற்காலத்தில் இணையத்தில் வீடியோக்கள் Divx, FLV, MP4, MKV போன்ற வடிவில் கிடைக்கின்றன. அவ்வாறான வீடியோக்களை Play செய்திடும்பொழுது மேற்குறிப்பிட்ட பிழை செய்தி வரும். இதனால் குறிப்பிட்ட DVD-க்கள் ஓடாது.

பெரும்பாலும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இதுபோன்ற பிழைச்செய்திகள் காட்டும். விண்டோஸ் மீடியா பிளேயருக்கு பதிலாக VLC Media Player-ஐ பயன்படுத்தலாம். சில நேரங்களில் வி.எல்.சி மீடியா பிளேயரிலும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடும்.

இவ்வாறு Codec பிழைச்செய்திகள் வராமல் இருக்கவும், அனைத்துவிதமான வீடியோக்களை பிளே செய்யவும் பயன்படுகிறது K-Lite Codec Pack மென்பொருள்.

K-Lite Codec Pack for all type of videos

இதில் பல்விதமான கோடக்குகள் (Codec Packs) தொகுப்பட்டுள்ளது. நன்றாக சோதிக்கப்பட்ட இம்மென்பொருள் தேவையான Codec களைப் பெற்றிருக்கிறது.

மென்பொருளை நிறுவியவுடன், உங்களுக்குப் பிடித்தமான DVD க்களை பிளே செய்து பார்வையிட முடியும்.

AVI, MKV, MP4, FLV, MPEG, MOV, TS, M2TS, RMVB, OGM, WMV, 3GP, WEBM, FLAC, Wavpack மற்றும் அனைத்துவிதமான பார்மட்களில் உள்ள வீடியோ கோப்புகளை பிளே செய்கிறது.

சிறந்த கோடக் பேக்கினைக்கொண்ட K-Lite Codec Pack டவுன்லோட் செய்திட
சுட்டி: Download K-Lite Codec Pack for free

With the K-Lite Codec Pack you should be able to play 99% of all the movies that you download from the internet.

  • The K-Lite Codec Pack has a couple of major advantages compared to other codec packs:
  • It is always up-to-date with the latest versions of the codecs.
  • It is very user-friendly and the installation is fully customizable, meaning that you can install only those components that you really want.
  • It has been very well tested, so that the package doesn’t contain any conflicting codecs. 
  • It is a very complete package, containing everything you need to play your movies.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments