Saturday, November 23, 2024
HomeFree softwareகம்ப்யூட்டர் டூ ஸ்மார்ட்போன் இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பது எப்படி?

கம்ப்யூட்டர் டூ ஸ்மார்ட்போன் இன்டர்நெட் கனெக்சன் கொடுப்பது எப்படி?

வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் இணைப்பை, உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தவாறே Tablet Pc, Android Smartphone போன்றவற்றிற்கு பகிர்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 

வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் Internet பயன்படுத்துவதற்கு லேன், கேபிள் மோடம், டயல்-அப், யூ.எஸ்.பி டோங்கல், வைஃபை ( LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle, Wi-Fi) போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள்.

share-home-internet-with-virtual-router-to-smartphones

இதனை  எந்தவொரு Router-ம் இல்லாமல் உங்கள்  கணினியில் இருந்தவாறே Wireless முறையில்   Laptop, Smart Phone, iPod , iPhone, Android Phone, Netbook போன்றவற்றுக்கு Wireless மூலம் இன்டர்நெட் இணைப்பை  ஏற்படுத்த முடியும். இதற்கு Virtual Router என்ற மென்பொருள் பயன்படுகிறது.
Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கம்ப்யூட்டரில் Windows 7 Operating System கட்டாயம் இருக்க வேண்டும். Desktop கம்ப்யூட்டர் எனில் Wireless Device -ம் இணைத்திருக்க வேண்டும்.

விர்சுவல் ரௌட்டர் மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: Download virtual router download for windows 7

1.முதலில் சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
 2.Install செய்த Virtual Router மென்பொருளை திறந்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும்
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். 

share-home-internet-with-virtual-router-to-smartphonesஇதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்த வேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய கைகளில் பயன்படுத்தக்கூடிய அதி நவீன ஸ்மார்ட்போன், டேப்ளட் கணினிகளிலும் இணைய இணைப்பை எளிதாக ஏற்படுத்திப் பயன்படுத்த முடியும்.

Tags: Virtual Router, Virtual router software, Virtual Router Software for Smartphones, Internet Home PC to Wireless Devices, Network, Wi-Fi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle.

RELATED ARTICLES

5 COMMENTS

  1. பயனுள்ள பதிவு நண்பா. ஒரு ஐயம்,

    நாம் மடிகணினியில் மோடம் வழியாகப் பயன்படுத்தும் இணைய வசதியை இந்த மென்பொருள்கொண்டு திறன்பேசிக்குப் பகிரும்போது மடிகணினியில் மோடம் இணைக்கப்பட்டு இரண்டும் செயல்பாட்டில் இருக்கவேண்டுமா? நண்பா..

    இல்லை, மோடத்தில்

  2. ஹலோ நண்பா நன் என்னுடைய கணினி மோடம் இணைக்கவில்லை ? அனால் மற்றொரு கணினியில் இணைக்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க ?

Comments are closed.

Most Popular

Recent Comments