Saturday, September 21, 2024
Homecomputer tipsகம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

முதலில் டிஜிட்டல் சாதனங்கள் என்றால் என்பதை தெரிந்துகொள்வோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் போன்றவைகள் அனைத்துமே டிஜிட்டல் சாதனங்கள் தான்.

இவைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம். உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறம் இதுபோன்ற சாதனங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அவைகள் விரைவில் பழுதடையா வண்ணம் பாதுகாக்க முடியும்.

ways to cleanup digital divices

பல நேரங்களில் டிஜிட்டல் சாதனங்களின் பயனர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அவ்வப்பொழுது கண்ணை கவரும் விதத்தில் உள்ள சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்கின்றனர். அவற்றின் பயன் அதிகமாக இருக்காத நிலையிலும் தொடந்து அவைகள் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இடம்பெற்றுவிடுகின்றன.

இதுபோன்ற தேவையில்லாத புரோகிராம்கள் கம்ப்யூட்டர் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மேலாக அதிகமாகிவிடும் நிலையில் அந்த டிஜிட்டல் சாதனங்கள் இயக்கத் தன்மையில் வேகம் குறைகிறது.

ஒரு வண்டியில் அது தாங்கும் அளவிற்கு மட்டுமே பாரம் ஏற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வண்டியின் வேகம் குறையதொடங்கும். சில நேரங்களில் அவை பேலன்ஸ் செய்ய முடியாமல் கவிழ்ந்து விபத்து ஏற்படும்.

அதுபோலதான் டிஜிட்டல் சாதனங்களும். அதன் தாங்குதிறனுக்கு (கொள்ளளவு) மேல் புரோகிராம்களை நிறுவினால் தானாவே வேகம்  குறைந்துவிடும். தேவையற்ற புரோகிராம்களால் அவைகள் பழுதடைய வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.

கம்ப்யூட்டர் டெஸ்டாப்பில் சேவ் செய்தல்: 

பெரும்பாலானவர்கள் மிக எளிதாக கோப்புகளை எடுக்கும் வசதிக்காக டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்துவிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

டெஸ்க்டாப்பில் கோப்புகள் சேர சேர கம்ப்யூட்டரில் செயல்படும் வேகத்திறனும் குறையும். அவ்வாறு செய்யாமல் வேறு போல்டர் ஒன்றை உருவாக்கி வேறு டிரைவில் சேவ் செய்து வைக்கலாம்.

கீபோர்ட் பாதுகாத்தல்: 

நிறைய பயனர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது நொறுக்கு தீனிகளை தின்றுகொண்டே பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களை அறியாமலேயே கீபோர்டில் உணவு துணுக்குள் விழுந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் தூசி, துகள்கள் என கீபோர்ட் இடுக்குகளில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் கீபோர்ட்டில் உள்ள கீகள் சில நேரம் செயல்படாமல் போகும். சிலர் வருடக்க்கணக்காக கூட கீபோர்டை சுத்தம் செய்யாமலேயே வைத்திருப்பம்.

கீபோர்டை தலைகீழாக கவிழ்த்து அதன்முதுகு பகுதியில் இலேசாக ஒரு தட்டிப் பார்த்தால் ஒரு கூடை அளவு குப்பை விழும்.  வாரம் இருமுறையாவது இவ்வாறு கீர்போர்டை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கென இருக்கும் பிரஷ்களைக் கொண்டும் கீபோர்டை சுத்தப்படுத்தலாம்.

சாப்ட்வேர் அப்டேட் கட்டாயம்

கம்ப்யூட்டரில் உள்ள சாப்டவேர்கள் சில நேரங்களில் அப்டேட் செய்யச் சொல்லி கேட்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் இதை செய்யாமல் குளோஸ் செய்துவிடுகின்றனர். அது தவறு. அப்டேட் செய்யச்சொல்லும்போது தவறாமல் அப்டேட் செய்துவிட வேண்டும். இதனால் பல்வேறு பிரச்னைகளை தீரும்.

டபுள் செக்யூரிட்டி தேவை

மின்னஞ்ல், வங்கி கணக்குகள் போன்றவற்றை இணையம் வழியாக கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்பை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். இதனால் மால்வேர் புரோகிராம்களை அனுப்பி பாஸ்வேர்ட் திருடும் கூட்டத்திலிருந்து தப்பிக்கலாம். இரண்டு அடுக்கு பாதுகாப்பு என்பது மொபைல் மூலம் மெசேஜ் பெற்று, அந்த அக்கவுண்ட்டை திறப்பதாகும்.

தவறாமல் செய்ய வேண்டும் டேட்டா பேக்கப்

டேட்டா பேக்கப் என்பது இதற்கு முன்பு நாம் கணினியில் பணிபுரிந்து வைத்திருக்கும் கோப்புகளை பேக்கப் எடுப்பதாகும். இதற்கு சாப்டவேர்கள் பல உள்ளன. ஒவ்வொரு புதிய கணினி பயனருக்கும் டேட்டா பேக்கப் பற்றி அறிவுரை தேவைப்படுகிறது. இது எதற்கென்றால் கம்ப்யூட்டர் ஏதாவது பழுதாகிடும்பொழுது, அதில் உள்ள டேட்டா அழியாமல் பாதுகாத்து, மீண்டும் கம்ப்யூட்டருக்கு கொண்டு வந்து பயன்படுத்திடதான். எனவே தவறாமல் டேட்டா பேக்கப் எடுப்பது அவசியம்.

மேலுக்கு மட்டுமல்ல.. உள்ளுக்குள் சுத்தம்

கம்ப்யூட்டரில் சேரும் தூசிகளால் அதை வெப்பத்திலிருந்து காத்திடும் காற்றாடிகள் பழுதடைகின்றன. இதனால் மேலும் கம்ப்யூட்டரில் உள்ள உட்பாகங்கள் பிராசசர், ஹார்ட் டிஸ்க் போன்றவைகள் கெட்டுப்போகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே தூசிகளை சுத்தம் செய்திட வேண்டும். காற்றடிக்கும் பம்பு மற்றும் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் computer cleaning liquid பயன்படுத்தி அவற்றை சுத்தப்படுத்தல் அவசியம்.

அதிக வெப்பம் ஆபத்து…

அதிக வெப்பமாக உள்ள இடங்களில் கம்ப்யூட்டர், செல்போன், டேப்ளட் சாதனங்களை வைத்து இயக்குவது ஆப்பத்தை விளைவிக்கும். இதுபோன்ற டிஜிட்டல் சாதனங்கள் அதிகபட்சமாக 35 டிகிர வெப்பம் வரைக்கும் தாங்கும். அந்த வெப்பநிலை உள்ள இடங்களில் மட்டுமே அவற்றை இயக்க வேண்டும். அதற்கு கூடுதலாக வெப்பம் உள்ள இடங்களில் வைத்து இயக்கினால் கட்டாயம் கம்ப்யூட்டர் காலியாகிவிடும்.

கிருமிகளின் உற்பத்தி இடம் மொபைல்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன் கிருமிகள் உற்பத்தி ஆகும் இடமாகவே மாறிவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்ன காரணம் என்றால் அதைப்பயன்படுத்துபவர்கள் கைகளை நன்றாக கழுவுவதில்லையாம். இதனால் பலரும் பயன்படுத்தும் பொதுவான லேப்டாப், டேப்லட், செல்போன் போன்ற சாதனங்களில் அதிகமாக கிருமிகளும் உற்பத்தியாகிவிடுகிறதாம்.

இதைத்தவிர்க்க அவற்றை அதற்கென கொடுக்கப்பட்ட சோப் வாட்டர் கொண்டு அவற்றை துடைத்து சுத்தப்படுத்திட வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது 99.9 சதவிகித கிருமிகள் ஒழிக்கப்படுகின்றன.

குழந்தைகளிடம் இதுபோன்ற சாதனங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.  இல்லையென்றால் விரைவிலேயே குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

ஆக உங்களது டிஜிட்டல் சாதனங்களை அதற்கென உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சுத்தமாக வைத்திருந்தால் கட்டாயம் அது ரிப்பேரும் ஆகாது. உங்களுக்கு செலவும் மிச்சமாகும்.. அதே சமயம் அது புதிய சாதனத்தைப் போல சுறுசுறுப்பாகவும் இயங்கும்.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments