Thursday, January 23, 2025
HomeAntiLoggerபாஸ்வேர்ட்களை திருட உதவும் Key-logging புரோகிராம்களை தடுக்க

பாஸ்வேர்ட்களை திருட உதவும் Key-logging புரோகிராம்களை தடுக்க

கீ லாகிங் என்றால் என்ன? 

கீலாகிங் என்பது இணைய திருடர்களால் நிரலாக்கப்பட்ட ஒரு மென்பொருள். இந்த மென்பொருளை உங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருந்தால், அது நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்கள் அனைத்தையும் அப்படியே அந்த மென்பொருள்/புரோகிராமை நிறுவியவருக்கு மின்னஞ்சலாக அனுப்பிவிடும்.

கீ லாகிங் முறையில் திருடபடும் பாஸ்வேர்ட்கள்

1. இமெயில் பாஸ்வேர்ட்,
2. பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்
3. இணையதளங்களில் உள்ள படிவங்களில் நிரப்படும் தகவல்கள் அனைத்தும்.

அதாவது இன்டர்நெட்டில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள், யூசர் நேம்கள் போன்றவற்றை அப்படியே தன்னுள் பதிந்துகொண்டு, அவற்றை கீலாகிங் புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்தவருக்கு மின்னஞ்சலாக அனுப்பி விடும்.

block keylogging sofware
கீ லாகிங் தடுப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் கீ-லாகிங் நிரல் செயல்படுகிறதா என எப்படி கண்டுபிடிப்பது?

கீலாகர் புரோகிராம் கம்ப்யூட்டரில் செயல்பட்டு கொண்டிருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்.

1. CTR+ALT+DEL கீகளை ஒரே சமயத்தில் அழுத்தி TASK MANGER செல்லவும்.
அங்கு கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு தொடர்ப்பபில்லாத புதிய புரோகிராம் இயங்கி கொண்டிருக்கிறதா என பார்த்து தெரிந்துகொள்ளலாம். 

2. ஆன்டி கீ லாகிங் மென்பொருள் பயன்படுத்தி  கீ லாகிங் நிரல்களை கண்டுபிடிக்கலாம்.

கீலாகிங் நிரலை தடுப்பது எப்படி?

இதுபோன்ற KeyLOGGER புரோகிராம்களுக்கு பாஸ்வேர்ட் செல்லாமல், நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்ட்களை உடனுக்குடன் Scrambling செய்து தடுப்பவைதான் Anti-Key-Logger-Software

இந்த வகை மென்பொருள் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்ட்டை கீலாகர்கள் உணரும் முன்பு அவற்றை சிதைத்துவிடுகிறது.

அதாவது, நீங்கள் தட்டச்சிடும் பாஸ்வேர்ட், பயனர் பெயர்கள் உடனுக்குடன் ஸ்கிராம்ப்ளிங் (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) செய்யபடுவதால் கீலாகர் புரோகிராம் ஆனது நீங்கள் தட்டச்சிடுவதை (Key Stroke)  என்ன எழுத்து என கண்டுபிடிக்க முடியாது. அவை கீ லாகர்களுக்கு சிதைக்கப்பட்ட எழுத்துக்களாகவே கிடைக்கும்.

சிதைந்த எழுத்துகளை பெற்று, யாரும் பாஸ்வேர்ட்டை முழுவதுமாக கண்டுபிடிக்க இயலாது. இதனால் கீலாகிங் புரோகிராம் அனுப்பியவருக்கு தேவையான தகவல்கள் கிடைக்காது.

ஆன்டி கீ – லாகர் போன்ற மென்பொருள் உங்களுடைய முக்கியமான பாஸ்வேர்ட், பயனர் பெயர்கள் திருடு போகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

Anti-Logger மென்பொருளை தரவிறக்க சுட்டி:

ஆங்கிலத்தில்:

AntiLogger protects every application on your computer, not just your web browser. The application stops keyloggers by scrambling every key that you type instantly, quietly and effectively in the background.

Even if a keylogger captures your keystrokes, all they’ll see are highly encrypted random characters.

KEY FEATURES INCLUDE:

  • System-Wide Keylogger Protection: Encrypts keystrokes deep in your computer. Even if stolen, your information is illegible.
  • Always up to date protection: Your protection does not rely on signature database
  • Financial Malware Protection: Banker Trojans, Secure connection intruders, Man-in-the-Browser attacks.
  • No confusing options to set. The Free version scrambles every keystroke, and protects everything that you type
RELATED ARTICLES

Most Popular

Recent Comments