கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற ஃபைல்களை நீக்கி, அதை வேகமாக செயல்பட வைக்க பயன்படும் ஒரு Freeware சி-கிளீனர் மென்பொருள்.
2003 ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்த மென்பொருளானது தற்பொழுது 1 பில்லியன் “டவுன்லோட்” களை கடந்துள்ளது.
தற்பொழுது இம்மென்பொருள் மேம்படுத்தப்பட்டு CCleaner 5.16.5551 பதிப்பாக வெளிவந்துள்ளது.
சிகிளீனர் மென்பொருள் கம்ப்யூட்டரில் செய்ய கூடிய வேலைகள்:
- டெம்ப்ரரி பைல்களை கீளின் செய்கிறது [Delete Temp flies]
- குக்கீஸ்களை நீக்குகிறது [Removes Cookies]
- தேவையில்லாத டேட்டாக்களை அழிக்கிறது [Cleans unwanted data]
- ரெஜிஸ்டிரி கிளீன் செய்கிறது [Registry Cleaning]
- தேவையற்ற மென்பொருளை முற்றாக [clean uninstall] நீக்குகிறது
இவ்வாறு செய்வதன் மூலம் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் (Computer Hard Disk) தேவையற்ற பைல்கள் அளிக்கப்பட்டு, ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடம் அதிகமாகிறது. இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது.
குக்கீஸ்களை டெலீட் செய்வதன் மூலம் பிரௌசிங் செய்வதால் உருவாகும் அனாமதேய பைல்கள் அழிக்கபடுகின்றன. இதனால் உங்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியாது.
ரெஜிஸ்ரி கிளீன் செய்வதன் மூலம் பிழைகள் மற்றும் முறையற்ற அமைப்புகள் (Errors and Broken Settings) சரிசெய்யப்படுகின்றன.
இந்த மென்பொருளின் எளிய கட்டமைப்பு [User Interface] பயனர்களை எளிதாக பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. CCleaner மென்பொருள் நான்கு பதிப்புகளில் [4 Editions of Cleaner] கிடைக்கிறது.
1. Professional
2. Network
3. Business
4. Technician
சிகிளீனர் உபயோகிக்கும் முறை:
கீழூள்ள சுட்டியை கிளிக் செய்து CCleaner மென்பொருளை டவுன்லோட் செய்து திறந்துகொள்ளவும். உங்களுக்கு இப்படி ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Install என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது இப்படி ஒரு விண்டோ தோன்றும். (CCleaner இன்ஸ்டால் செய்யும்பொழுது கூடவே Avast Antivirus இன்ஸ்டால் ஆகும்படி செட் செய்யப்பட்டிருக்கும். இதில் Yes, Install Avast Free Antivirus என்பதில் ’அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ்’ தேவையில்லை எனில் அதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிடலாம்)
அதில் Run CCleaner என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது இப்படி ஒரு விண்டோ தோன்றும். அதில் Start My Trial என்ற பட்டனை அழுத்தவும்.
அதன் பிறகு இப்படி ஒரு விண்டோ வரும். அதில் Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
அனலைசேசன் முடிந்த பிறகு உங்களுக்கு இப்படி காட்டும்.
அதில் Continue கிளிக் செய்யவும். அனலைசேசன் ப்ராசஸ் நடக்கும்.
இப்பொழுது இப்படி ஒரு விண்டோ வரும்.
இப்பொழுது Run Cleaner என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான். உங்களுடைய கம்ப்யூட்டரில் தேவையற்ற ஃபைல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு இறுதியாக “Cleaning Completed” இப்படி காட்டும்.
இந்த முறையில் சிகீளினர் மென்பொருளை பயன்படுத்தி மிக எளிதாக தேவையற்ற ஃபைல்களை நீக்கி, கம்ப்யூட்டரை சுத்தப்படுத்தலாம்.
ரெஜிஸ்ட்ரி கிளீனிங்
இதே முறையில் Registry என்பதை கிளிக் செய்து, Scan for Issue என்பதை கிளிக் செய்து , முடிவில் Fix Selected Issue என்பதை கிளிக் செய்து ரெஜிஸ்ட்ரி கிளீன் செய்யலாம்.
Tools
Tools என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Uninstall, Startup, Browser Plugins, Disk Analyzer, Duplicate File Finder, System Restore, Drive Wiper போன்ற வசதிகளைப் பயன்படுத்திடலாம்.
சிகிளினர் லேட்டஸ்ட் வர்சன் [CCleaner 5.16.5551] டவுன்லோட் செய்ய
தொடர்புடைய பதிவு: சிகிளீனரில் டூப்ளிகேட் ஃபைல்களை கண்டறிந்து நீக்கும் வசதி
Tags: Ccleaner Latest Version Download, CCleaner 5.16.5551 Download, CCleaner Latest Version 2016 Download.
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரையாள் வருகை
இத்தரையில் எல்லோரும்
எல்லாமும் பெற்று வாழ
எல்லோருக்கும் வழிகிட்டுமென
புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
இத்தால் உங்கள் யாழ்பாவாணன்