Wednesday, January 22, 2025
Homeanti-virusவிண்டோஸ் 8 ற்கான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்கள் | Windows 8 Protection with antivirus

விண்டோஸ் 8 ற்கான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்கள் | Windows 8 Protection with antivirus

Best Antivirus software for Windows 8

Every PC wants a Good Protection software to prevent Virus Program affection. There are plenty of antivirus software to download on internet. BUT we want only trusted 100% protection software. Here are list of best antivirus software given with explanation. you should have at least one antivirus software for you PC.
antivirus for windows8

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான சிறந்த ஐந்து இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆன்டி வைரஸ் மென்பொருளும் குறிப்பிட்ட சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளவை. இணையத்துடன் இணைந்திருக்கும் கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் என்பது சர்வ சாதாரணமாக இருக்கும். அவற்றிலிருந்து கம்ப்யூட்டரை பாதுகாக்க இந்த Antivirus Program கண்டிப்பக உதவும்.

Microsoft Security Essentials:

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும்.

AVG:

அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும்.
இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது.
பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இடமான கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது.
தகவல்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.

Avast:

இதனைப் பெரும்பாலானவர்கள் முன்பே பயன்படுத்தி இதன் செயல்திறனை அறிந்திருப்பார்கள்.

மிகச்சிறந்த விண்டோஸ் 8 ஆண்ட்டிவைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று.

வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.

Avira:

அவிரா ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும், விண்டோஸ் 8க்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் மட்டுமின்றி விளம்பரங்களாக வரும் ஆட்வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது.
நம் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது.
தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன் தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.

Kaspersky Antivirus:

விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று.

பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது.

வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.

Tags: Antivirus, Windows 8 antivirus, PC protection software. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments