Tuesday, December 24, 2024
Hometech newsரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற

ரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற

reliance jio

அறிமுகம் 4ஜி VO-LTE

4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும்.

இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Volte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவைகளை கடந்த டிசம்பர் 2015 ல் தொடங்கியது. ஆரம்பத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைலை வழங்கியது.

சோதனை ஓட்டம் Beta Testing

கடந்த ஜூலை மாதம் முதல் சாம்சங் உயர்வகை போன்களுக்கு(எ.கா) s6,s7) இலவச சிம்கார்டை 3 மாத அன்லிமிடெட் டேட்டா ,வீடியோ, வாய்ஸ் கால்களுடன் வழங்கியது ஜியோ நிறுவனம்.

LYF Mobile Volte சப்போர்ட்

ஜியோ நிறுவனம் LYF VOLTE மொபைல்களை ரூ. 3000 முதல் வழங்குகிறது, வாங்குபவர்களுக்கு 3 மாத அன்லிமிடெட் டேட்டா , வாய்ஸ் வீடியோ கால்கள் இலவசமாக கிடைக்கிறது.

JIofi2 மோடம்

ஜூலை மாதம் முதல் HP வாடிக்கையாளர்களுக்கு ரூ,2899 ல் Jio modem வழங்கப்பட்டது , இந்த மோடம் ஒரு Wifi Hotspot போல செயல்படும். ஒரே நேரத்தில் 32 Device களை இணைக்க முடியும், இதில் 6 மணிநேரம் செயல்படும் பேட்டரி உள்ளது, சிறியதாக உள்ளதால் நாம் பாக்கெட்டில் எளிதாக எடுத்து செல்லலாம்.

இந்த மோடம் ஆகஸ்டு 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது, இதற்கும் 3மாத அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் இலவசம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய JioJoin என்ற App ஐ Download செய்து அதிலிருந்து பயன்படுத்தலாம்.
இலவச சிம் எப்படி பெறுவது?

கடந்த ஆகஸ்ட் 20 முதல் Samsung J series, A series , Micromax, LG, ASUS, Panasonic, Yu, TCL & Alcatel போன்ற மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .

சிம்கார்டை இலவசமாக பெற உங்கள் மொபைல் , 2 போட்டோ, ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர் , ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் , உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள், Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும் .

பிறகு அந்த Coupon Code ஐ அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் . ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.

ஆக்டிவேசன்

ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம். உங்கள் Network Setting ல் LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும். Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள்.

கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம். எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும். அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது, Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.

My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து கொள்ளுங்கள் . Live tv, video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம், Speed test .net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம். எங்கள் கறம்பக்குடியில் 23 MBPS.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், 3 மாதத்திற்கு பிறகு என்னவாகும் என்று. 1GBக்கு தற்போது 255 வரை செலவாகும் நிலையில் ஜியோ நிறுவனம் 10 ஜிபி டேட்டாவை 97 க்கு வழங்க இருக்கிறது. எனவே கவலை வேண்டாம்.

முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் இலவசமாக தற்போது பேசிக்கொள்ளலாம்.

தகுதியான போன்கள்

<b>Free sim Samsung Devices</b>

Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Galaxy S6, Galaxy J3 (2016), ON7, Galaxy A8, Galaxy S6 Edge, ON5, Galaxy Note 5, Galaxy Note 4, Galaxy Alpha, Galaxy S6 Edge Plus, Galaxy Note 4 Edge, Galaxy Note 5 Duos, Galaxy S5 Neo, S7, Galaxy A5 (2016), Galaxy A7 (2016), S7 Edge, A8 VE, J5 (2016), J7 (2016), ON5 Pro, ON7 Pro, Galaxy J2 (2016), J Max, Galaxy A9, Galaxy A9 Pro, Galaxy C5, Galaxy C7, Galaxy J2 Pro, Galaxy Note 7.

Micromax devices:

Canvas Pulse 4G, Canvas Nitro 4G, Canvas Knight 2, Canvas 5, Canvas Evok, Canvas 6 Pro,Canvas 6, Canvas Blaze 4G, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Xpress 4G, Canvas Blaze 4G Plus, Canvas Pace 4G, Canvas Mega 4G, Bolt Selfie, Canvas Mega 2, Canvas Unite 4, Canvas Fire 6, Canvas Sliver 5, Canvas Juice 4G, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Unite 4 Pro, Canvas Play 4G, Canvas Amaze 4G, Unite 4 Plus, Canvas Tab

LG devices:

K332 (K7 LTE), K520DY (Stylus 2), K520DY, H860 (LG G5), K500I (X Screen), K535D (Stylus 2 Plus), LGH630D (G4 Stylus 4G) & LGH 442 (LGC70 Spirit LTE)

ASUS devices:

ZenFone 2 Laser (ZE550KL), Zenfone 2 (ZE551ML), Zenfone Max (ZC550KL), Zenfone 2 Laser 5.0 (ZE500KL), Zenfone 2 (ZE550ML), Zenfone Selfie( ZD551KL), Zenfone 2 Laser (ZE601KL), Zenfone Zoom(ZX551ML), Zenfone Go 5.0 LTE (T500), Zenfone 3 ZE552KL, Zenfone 3 Laser( ZC551KL), Zenfone 3( ZE520KL), Zenfone 3( ZS570KL), Zenfone 3( ZU680KL)

Panasonic devices:

ELUGA L, ELUGA Switch, ELUGA Icon, T45, ELUGA I2 ( 1GB ), ELUGA L2, ELUGA Mark, ELUGA Turbo, ELUGA Arc, ELUGA I2 2GB, ELUGA I2 3GB, ELUGA I3, ELUGA Icon 2, ELUGA A2, ELUGA Note, P55 Novo 4G, ELUGA Arc 2, P77

Alcatel devices:

POP3, POP Star, POP4, OneTouch X1, Pixi 4 -5

TCL devices:

TCL 560, Pride T500L, FIT 5.5, TCL 562

Yu devices:

Yu Yuphoria, Yu Yureka, Yu Yutopia, Yunique, Yuphoria, Yureka Plus, YU Note, Yureka S, Yunicorn

RELATED ARTICLES

Most Popular

Recent Comments