Wednesday, January 22, 2025
HomeAndroidஇன்டர்நெட் டேட்டா தீராமல் இருக்க டிப்ஸ் !

இன்டர்நெட் டேட்டா தீராமல் இருக்க டிப்ஸ் !

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் பெரும்பாலும் ஏற்படும். ஒன்று பேட்டரி டவுன் ஆகி அவ்வப்போது எரிச்சலை தரும். இன்னொன்று இண்டர்நெட் டேட்டா காரணமாக வரும் அதிகமான பில்தொகை.

internet data

ஆண்ட்ராய்டு போனை வைத்து கொண்டு வெறும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால் மட்டும் பயன்படுத்த முடியாது கண்டிப்பாக இண்டர்நெட்டில் பல விஷயங்களை தேடவும், சமூக வலைத்தளங்களில் நேரங்களை செலவு செய்யவும்தான் தோன்றும் அப்படியானால் இண்டர்நெட் பில் அதிகமாகத்தானே வரும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

ஆனால் அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் ஒருசில வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் இண்டர்நெட் டேட்டாவை பெருமளவு குறைக்கலாம். அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்

நம்முடைய மொபைல் இண்டர்நெட் டேட்டா அதிகபட்சமாக செலவு ஆவது எதில் தெரியுமா? ஸ்டீரிமிங் வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் ஆடியோவில்தான்.

இந்த நவீன டெக்னாலஜி உலகில் பல ஆஃப்லைன் ஸ்டீரிமிங் வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் ஆடியோ கிடைக்கின்றது. அவற்றை பயன்படுத்தினாலெ பெரும்பாலான டேட்டா உபயோகம் குறைந்துவிடும்

அடுத்ததாக ஆன்லைனில் நாம் பார்க்கும் நேவிகேஷனையும் ஆஃப்லைனில் பார்க்கலாம். கூகுள் நேவிகேஷனை ஒருமுறை ஆன்லைனில் பார்த்தால் மீண்டும் அதே இடத்தை 30 நாட்கள் வரை ஆன்லைன் இல்லாமலேயே பார்க்கலாம். இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

இதேபோல் நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் நேவிகேஷனும் ஆஃப்லைனில் இயங்குகிறது. அவற்றையும் உபயோகப்படுத்தலாம்.

டேட்டா பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும்

ஒருசில ஆப்ஸ்களில் நாம் மணிக்கணக்கில் இருப்போம். அந்த மாதிரியான நேரத்தில் தேவையில்லாமல் நமது டேட்டா செலவாகிவிடும். இதுபோன்ற நேரங்களில் நாம் டேட்டாவை சேவ் செய்ய, ஒவ்வொரு ஆப்ஸ்களுக்கும் இவ்வளவு டேட்டாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டாம் என்பதை செட்டிங் மூலம் முறைப்படுத்தலாம். அந்த குறிப்பிட்ட டேட்டா முடிந்தவுடன் ஆட்டோமெட்டீக்காக டேட்டா நின்றுவிடும்.

இதை செய்வதற்கு நீங்கல் செட்டிங் சென்று அதில் உள்ள டேட்டா யூசேஜ் என்ற சப்-மெனுவிற்குள் செல்ல வேண்டும். இதில் நீங்கள் எவ்வளவு டேட்டா ஒரு நாளைக்கு செலவு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்தும் வகையில் பதிவு செய்துவிட்டால், அந்த குறிப்பிட்ட டேட்டா முடிந்தவுடன் தானாகவே இண்டர்நெட் டீஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

உங்கள் டேட்டாவும் மிச்சப்படும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு டேட்டாதான் பயன்படுத்த வேண்டும் என்று மனக்கட்டுப்பாட்டை நம்மால் வைக்க முடியாது. அந்த டேட்டாவின் அளவை நம்மால் கணக்கிட்டு கொண்டும் இருக்க முடியாது. எனவே இந்த வசதியை செய்துவிட்டால் கட்டுப்பாட்டுடன் டேட்டாவை சேமிக்கலாம்.

மொத்தமாக நாள் ஒன்றுக்கு டேட்டாவை பிக்ஸ் செய்வதை போல ஒவ்வொரு ஆப்ஸ்-ஐ பயன்படுத்தும்போதும் இதே முறையை பின்பற்றலாம். குறிப்பாக நாம் ஃபேஸ்புக், டுவிட்டரை அதிக அளவில் பயன்படுத்துகிறோம் என்றால் அந்த குறிப்பிட்ட ஆப்ஸ்களுக்கு மட்டும் செட்டிங்கில் முறைப்படுத்தி விடலாம்.

டேட்டாவை இப்படியும் சேமிக்கலாமே…

டேட்டாவின் பயன்பாட்டை குறைக்க கூகுள் குரோம் மற்றும் ஓபரா இணையதள பிரெளசர்களும் உதவுகின்றன என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் இது உண்மைதான். ஆம் கூகுள் குரோமில் எந்த ஒரு பக்கத்தையும் நீங்கள் ஓப்பன் செய்தால் அந்த பக்கம் சேமித்து வைக்கப்படும்.

அடுத்த முறை நீங்கள் அதே பக்கத்தை ஓப்பன் செய்யும் போது மிகக்குறைந்த டேட்டாவே செலவு ஆகிறது. இதேபோல் ஓபரா பிரெளசரும் இண்டர்நெட்டின் பயன்பாட்டினை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த பிரெளசர் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் தனது ஹிஸ்ட்ரியில் சேவ் செய்து வைத்து கொள்வதால் உங்களுக்கு கூடுதலான டேட்டாக்கள் மிச்சப்படும்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் மொபைல் போனின் டேட்டாவை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்,

Tags: Internet Data, Reduce Internet data tips, smartphone net data, Data Consumption, Android Smartphone tips, Reduce mobile data in Tamil.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments