தமிழில் மென்பொருள்கள் பல உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) தொடங்கப்பட்டுள்ளது.
ஆக்கபூர்வமான எண்ணமுடையவர்களுக்கு, அவற்றைச் செயல்படுத்த துணை செய்ய ஏற்பட்டவை தான் செயல் உருவாக்க மையங்களுமாகும் (Product/ Process Incubation Centers).
இன்று தமிழிலும் மென்பொருள்கள் (SOFTWARE) உருவாக்கப்பட வேண்டியதின் தேவை ஏற்பட்டுள்ளது. பலர் தமிழ் மென்பொருள்களை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு, அதற்குத் தேவையான வசதிகளோ, வசதிகளை உருவாக்க மூலதனமோ இல்லை.
எனவே அவர்களுக்கு உதவும் வகையில், தேவையான எல்லா வசதிகளையும் கொண்ட தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதனால் அவர்களுடைய எண்ணங்கள் செயல்வடிவம் பெறுகிறது.
தமிழில் மென்பொருள் உருவாக்கும் எண்ணமும், ஆர்வமும் கொண்டிருப்போர் அந்த எண்ணங்களைச் செயல்படுத்தவும், தேவையான ஆய்வு (Research) மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும் (Experiment), மேம்படுத்தி (Improves) மென்பொருட்களை உலகிற்கு வழங்கவும் தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) துணை புரியும்.
தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்தில் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) வசதிகள் (Facilities):
தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்தில் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) தமிழ் மென்பொருள் (Software) உருவாக்கத் தேவையான பணியிடமும் (Work Station), இணைய இணைப்புடன் கணினிகளும், (Computers), மென்பொருள்களும் (Software) , மற்ற கருவிகளும் (Printers, Xerox &etc), நூலகம், கலந்துரையாடல் கூடம் (Conference Hall), வரவேற்புக்கூடம், சேவைகளும் இருக்கும்.
பயனாளர்கள் (Users or Developers) :
தமிழில் மென்பொருள் உருவாக்கும் எண்ணமும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் (Students), ஆசிரியர்கள் (Teachers & Professor), தனியர்கள் (Individuals) , சிறு, குறு தொழில் நிறுவனங்கள் (Micro, Small Enterprises) தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்தின் (TAMIL SOFTWARE INCUBATION CENTER) உதவியுடன் மென்பொருட்களை (Software) உருவாக்கலாம்.
பயனாளர்களைத் தேர்வு செய்யும் முறை (Selection Process of Developers) :
பயனாளர்கள் தங்கள் திட்ட அறிக்கையை (Project Report) முதலில் விண்ணபிக்கவேண்டும்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் வல்லுநர் குழு திட்டத்தின் தேவை தன்மையை கருதி உரியவர்களை தேர்ந்தெடுக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் 64 சதுர அடி கொண்ட பணியிடமும் (Work Station), கணினியும் (Computer), தேவையான மென்பொருள்களும் (Software) தரப்படும்.
பயனாளர்கள் நூலகம் (Library ) , கருத்தரங்கக் கூடத்தையும் (Conference Hall) பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் உள்ள வல்லுநர் (Experts) உதவியையும் (Assistance) பெற்றுக் கொள்ளலாம்.
சேவைக் கட்டணம் (Service Charges):
தமிழ் மென்பொருள் உருவாக்க மையத்தை (TAMIL SOFTWARE INCUBATION CENTER) நடத்துவதற்குத் தேவையான நிதி இலாப நட்டம் இல்லாத வகையில் பயனாளர்களிடமிருந்து கீழ்கண்டுள்ள வகையில் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.
படைப்பாளர் (Developer) கட்டணம் (ஒரு நபருக்கு/ ஒரு மாதத்திற்கு-Rates in ` per month/per person)
1. மாணவர்கள் / For Students 1000
2. தனி நபர்கள் / For Individuals 4000
3. சிறு மற்றும் குறு நிறுவனங்கள் / For Institutions’s / SMI 10000
மேலும், உருவாக்கப்படும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்குமாயின், உருவாக்குபவர் செலுத்திய கட்டணத்தில் உரிய கழிவு வழங்கலாம் என்ற திட்டமும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு :
தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER),
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
அண்ணா பல்கலைக்கழக வளாகம்,
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்,
சென்னை – 600 025. Ph : 044-22201012, 22301012/1109 ,
Web site : www.tamilvu.org Email : tamilvu@yahoo.com
Tags: Tamil software creation, Tamil software, TAMIL SOFTWARE INCUBATION CENTER, free Tamil software, software solution in Tamilnadu, Softwareshops, Tamil software engineer, Tamil Menporul, Tamil software incubation, Tamil software center, Tamil Ilavasa menporul.