Whatsapp releases / released new app for PC both windows and mac so that you can use whatsapp in your PC easily through installing the software .
வாட்சப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி எளிய வழி
வாட்சப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்களே இல்லை. Text Message, Video Message, Groups வசதி மற்றும் வாய்ஸ்கால் போன்ற வசதிகள் இருப்பதினால் வாட்சப் உலகில் பெரும்பாலானவர்கள் அதிகம் கவர்ந்துள்ளது. அப்படிப்பட்ட வாட்சப்பை ஸ்மார்ட்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.
எமுலேட்டர் மென்பொருள்
அதை கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாத என்று பலர் ஏங்கி கொண்டிருந்த வேளையில் அதை தீர்க்க வந்தது எமுலேட்டர் என்ற இடைத்தரகு மென்பொருள்.
அது கம்ப்யூட்டரையும், வாட்சப்பையும் இணைத்திட உதவியது. ஆனால் இப்போது அந்த சுற்றி வளைக்கும் வேலை எதுவும் இல்லை.
விண்டோஸ், மேக் கம்ப்யூட்டர்களில் மிக எளிதாக வாட்சப் பயன்படுத்தலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
வெப்வாட்சப்.காம்
உங்களது கம்ப்யூட்டரில் web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவேண்டும். அங்கு தோன்றும் QR Code ஐ உங்களது போனில் வாட்சப் ஓப்பன் செய்து அங்கு வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை கிளிக் செய்து, அதில் தோன்றும் Web Whatsapp என்பதை கிளிக் செய்து ஸ்மார்ட்போன் மூலம் PC யில் தெரியும் QR Code ஐ ஸ்கேன் செய்தால் போதுமானது.
உடனே உங்களுடைய கம்ப்யூட்டரில் வாட்சப் செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
இனி, நீங்கள் உங்களது விருப்பம் போல வாட்சப்பை கம்ப்யூட்டரில் பயன்படுத்திட முடியும்.
எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது குறித்த வீடியோ
தொடர்புடைய இடுகை: வாட்சப் மென்பொருள் – ஒரு பார்வை
Tags: Whatsapp on pc, whatsapp on laptop, whatsapp on computer, how to use whatsapp in pc.