Saturday, September 21, 2024
HomeFree softwareவால்பேப்பர் டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்

வால்பேப்பர் டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்

வால்பேப்பர் டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்

நீங்கள் ஒரு வால்பேப்பர் பிரியரா? விதவிதமான வால்பேப்பர்களை விரும்புவரா? உங்களது கம்ப்யூட்டரை வால்பேப்பரால் அலங்கரித்து ரசிப்பவரா? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.

வால்பேப்பர் போட் எனும் இந்த இலவச மென்பொருள் மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வால்பேபர்களை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும்.

wallpapper download software

வால்பேப்பர் போட் டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Wallpaper Bot Software

18 MB அளவுகொண்ட இந்த மென்பொருளானது விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1, மற்றும் விண்டோஸ் 10 ஆகியவற்றில் நன்றாக இயங்க கூடியது. இம்மென் பொருளில் புதிய வால்பேப்பர்களை டவுன்லோட் செய்வதற்கு Date Added என்பதை கிளிக் செய்யவேண்டும். அப்படி செய்யும்போது சமீபத்திய புதிய வால்பேப்பர்கள் உங்களுக்கு டவுன்லோட் கிடைக்கும் .

பாப்புலரான வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய By Popularity என்பதனை சுட்ட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் Tags என்பதன் மூலம் பல்வேறு வகைகளில் உள்ள வால்பேப்பர்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மென்பொருளில் மூன்று அம்சங்கள் உண்டு. 1. Download, 2. Set As Background, 3. Favorites.

டவுன்லோட் என்பதை சுட்டினால் தேவையான வால்பேப்பரை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். செட் ஆஸ் பேக்கரவுண்ட் என்பதை சுட்டினால் , அந்த வால்பேப்பரை உடனடியா பேக்ரவுண்டாக சேமித்துக்கொள்ள முடியும். பேவரைட் என்பதை பிடித்த வால்பேப்பர்களை Favourite செய்து கொள்ள முடியும்.

தொடர்புடைய இடுகை: போட்டோவை அழகாக மாற்ற இலவச மென்பொருள் 

Tags: wallpapper download software, free software for Wallpapper, Wallpapper free download.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments