Wednesday, January 22, 2025
HomeFree softwareமென்பொருள் (Software) என்றால் என்ன?

மென்பொருள் (Software) என்றால் என்ன?

சாப்ட்வேர் என்றால் என்ன?

தமிழில் மென்பொருள் என வழங்கப்படும் சாப்ட்வேர் என்பது அறிவுறுத்தல்களின் (கட்டளைகள்)  தொகுப்பு (collections of instruction)  . இது எண்ணிம முறையில் தொகுப்பட்டிருக்கும்.

கணிப்பொறிகளால் மட்டுமே படித்தறிந்து செயல்படுத்தக்கூடிய நிரல்வரிகளின் தொகுப்பு என்று கூட சொல்லலாம். கணிப்பொறியில் ஒரு உள்ளீட்டை கொடுத்து, வெளியீட்டைப் பெற்றுக்கொள்ள பயன்படும் தரவுகளின் தொகுப்பு எனவும் விளக்கம் எடுத்துக்கொள்ளலாம்.

menporual enral enna

மென்பொருள் இல்லை என்றால் கம்ப்யூட்டர் இயங்காது. அது வீண்தான். உதாரணமாக பிரௌசர் இல்லை என்றால், இன்டர்நெட் பயன்படுத்த முடியாது. பிரௌசர் ஒரு மென்பொருள் தான்.  மென்பொருளானது கம்ப்யூட்டருடன் ஒத்திசைந்து செயல்படக்கூடியது. கம்ப்யூட்டரில் ஆபரேட்டிங் சிஸ்டம் இல்லையென்றால் பிரௌசர் செயல்பட முடியாது.

சாப்ட்வேர் என்பது கண்ணுக்குத் தெரியாதது. தொட்டு உணர முடியாதது. ஹார்ட்வேர் என்பது கண்ணால் பார்க்க முடிந்த ஒன்று. சுருக்கமாக சொல்லப் போனால் ஹார்ட்வேர் என்பது உடல் மாதிரி. சாப்ட்வேர் என்பது அதை செயல்படுத்தும் உயிர் மாதிரி. இரண்டும் ஒத்திசைந்தால் மட்டுமே கணினி இயங்கும்.

மென்பொருள் குறித்த தமிழில் விரிவான விளக்கத்தை விக்கிபீடியாவில் படித்து அறிந்துகொள்க.

கம்ப்யூட்டருக்கு என்னென்ன சாப்ட்வேர்கள் தேவை?

1.ஆபரேட்டிங் சிஸ்டம்:

கம்ப்யூட்டருக்கு மிக முக்கியமான தேவையாக இருப்பவை ஆபரேட்டிங் சிஸ்டம். இது இருந்தால்தான் கம்ப்யூட்டரில் அடங்கியுள்ள பகுதிப் பொருட்கள் இயங்கும். அதை இயங்க வைப்பதாலேயே இதற்கு Operating System / இயங்குதளம் என பெயரிடப்பட்டுள்ளது.

2. பிரௌசர்:

மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் கணினியில் நிறுவினால், அதனுடன் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் சில மென்பொருட்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும். அதில் ஒன்றுதான் பிரௌசர். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர ர் என்ற பிரௌசர் அதில் உடனிருக்கும்.

3. ஆபிஸ் சாப்ட்வேர்:

கண்டிப்பாக இது ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். இதில் வேர்ட் ப்ராச சர், எக்சல், பவர்பாய்ண்ட், போன்ற அதி முக்கிய மென்பொருட்கள் இருக்கும். இதைப் பயன்படுத்திதான் அலுவலங்கள் கோப்புகள் உருவாக்கி நிர்வகிக்கின்றனர்.

சாப்ட்வேர் இல்லை என்றால் ஆகும்?

சாப்ட்வேர் இல்லை என்றால், கண்டிப்பாக கம்ப்யூட்டர் இயங்காது. எந்த ஒரு மென்பொருள் இல்லை என்றால், அது  வேஸ்ட். முன்னரே குறிப்பிட்டபடி, உயிர் இல்லை என்றால் உடலால் எந்த பயனும் இருக்காது. சாப்ட்வேர் இன்றி எந்த ஒரு கம்ப்யூட்டரும் இயங்க முடியாது.

மென்பொருள் என்பது சாப்ட்வேருக்கு பொருத்தமான சொல்லா?

Software என்ற சொல்லுக்கு சரியான தமிழ் பதம் மென்பொருள் என தமிழறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். கண்டிப்பாக அதற்கு ஈடான தமிழ் சொல் இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்லலாம். எனவே மென்பொருள் என்பது சாப்ட்வேர் என்ற சொல்லுக்கு சரியான சொல்லாக இருக்கும்.

பயன்மிகு சாப்ட்வேர்கள் பத்து

1. ஆன்ட்டி வைரஸ் – Anti-Virus

 கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கபட்ட ஆரம்ப நாட்களிலிருந்து, தற்பொழுது வரை அதை பாழ்படுத்திட உருவாக்கப்பட்டதுதான் வைரஸ். இதுவும் ஒருநிரல் தொகுப்புதான். கட்டளைகளின் தொகுப்பு. அந்த கட்டளைகளுக்கு ஏற்ப, கணினியில் தகாத செயல்களைச் செய்யக்கூடியவை. எனவேதான் அதை வைரஸ் கிருமியோடு ஒப்பிட்டு, வைரஸ் என அழைக்கின்றனர்.

அந்த கெட்ட பயனில்லாத நிரல் தொகுப்பு செய்யும் வேலைகளைத் தடுத்திட உருவாக்கப்பட்டவைதான் ஆன்ட்டி-வைரஸ். இதுவும் ஒரு புரோகிராம்தான். வைரஸ் நிரல்கள் என்னென்ன செய்யுமோ, அவற்றிற்கு எதிராக செயல்பட்டு, அந்த நிரல்கள் செயல்படா வண்ணம் முடக்கச் செய்பவை ஆன்ட்டி வைரஸ்.

பிரபல நிறுவனங்கள் இணையதளம் மூலம் பரவும் வைரஸ்களை கண்டறிந்து, அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை உருவாக்கி கொடுக்கின்றனர்.

உதாரணமாக, AVG, Housecall, McAfee போன்றவற்றை குறிப்பிடலாம்.

2.ஆடியோ / மியூசிக் புரோகிராம்.

கம்ப்யூட்டர் என்றால் இது இல்லாமலா? மனிதர்கள் எப்பொழுதும் பொழுது போக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பாடல் கேட்க என பயன்படும் புரோகிராம்கள் இவை. உதாரணமாக MediaMonkey,  MusicBee,  aTunes, Foobar2000, Audacious, AIMP  போன்றவற்றை குறிப்பிடலாம்.

3, பிரௌசர்கள்

ஒவ்வொரு கம்ப்யூட்டரில் பிரௌசர்கள் கண்டிப்பாக இருக்கும். இணையத்தை பயன்படுத்தும் இந்த புரோகிராம்கள் முறையே 1. கூகிள் குரோம், 2. ஃபயர்பாக்ஸ், 3. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், என்ற வரிசையில் முதன்மை பெற்றுள்ளது. கூகிள் குரோம் பிரௌசர் இருப்பதிலேயே அதிக வேக பிரௌசிங் அனுபவத்தை கொடுக்கிறது.

4. டிரைவர்ஸ்

இது பெயருக்கு ஏற்றபடியே ஓட்டுநராக செயல்படுபவை. இது புரோகிராம் அல்ல. ஏற்கனவே இருக்கும் ஒரு புரோகிராமை கம்ப்யூட்டர் ஹார்ட்வேருடன் ஒத்திசைந்து விரைவாக செயல்பட உதவுபவை. கம்ப்யூட்டர் ஹார்ட்வேருக்கும், புரோகிராமுக்கும் ஒத்திசைவை ஏற்படுத்தி தருபவை. இதனால்தான் இதற்கு டிரைவர் என்ற பெயர் வந்தது.

5, ஆபரேட்டிங் சிஸ்டம்

கம்ப்யூட்டர் செயல்பட அதிமுக்கியமான அடிப்படை  புரோகிராம் தொகுப்பு இது.

  • Linux and Variants
  • Mac OS
  • MS-DOS
  • IBM OS/2 Warp
  • Unix and Variants
  • Windows CE
  • Windows 3.x
  • Windows 95
  • Windows 98
  • Windows 98 SE
  • Windows ME
  • Windows NT
  • Windows 2000
  • Windows XP
  • Windows Vista
  • Windows 7
  • Windows 8 and 8.1
  • Windows 10

என்பன போன்ற ஆபரேட்டிங் சிஸ்டம்கள் உள்ளன. இதுபற்றி விவரமாக அறிந்துகொள்ள இந்த லிங்க் – ஐ கிளிக் செய்யவும்.

6. மூவி பிளேயர்

திரைப்படங்களை பார்க்க, வீடியோ பார்க்க உதவிடும் புரோகிராம்கள். தற்பொழுது அதிக வசதிகள் அடங்கிய பிளேயர்கள் வெளிவந்துவிட்டன. அதில் முதன்மையானது VLC Player. விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து கிடைப்பது விண்டோஸ் மீடியோ ப்ளேயர்.

7. கிராபிக்ஸ் சாப்ட்வேர்

படங்களை எடிட் செய்ய, ரீசைஸ் செய்ய, புதிய கிராபிக்ஸ் படங்கள் உருவாக்கப் பயன்படுபவை கிராபிக்ஸ் சாப்ட்வேர்கள். உதராணமாக போட்டோஷப், கோரல்டிரா போன்றவற்றை குறிப்பிடலாம்.

8. புரோகிராமிங் லாக்வேஜ்

புரோகிராம் செய்ய உதவும் மென்பொருள்கள் இவை. C++, HTML, Java, Perl, Visual Basic (VB) போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். இவற்றைப் பயன்படுத்தி தேவையான புரோகிராம் எழுத முடியும்.

9.  Utility புரோகிராம்கள்: – பயன்பாட்டு மென்பொருள்கள்

 டிஸ்க் கிளீன் அப், பைல்களை கம்ப்ராஸ் செய்ய, ரெஜிஸ்ட்ரி கிளீன் செய்ய உதவும் புரோகிராம்கள் Utlity புரோகிராம் வகைகளைச் சார்ந்தவை. தமிழில் பயன்பாட்டு மென்பொருள் என குறிப்பிடப்படுகின்றன.

10. கேம்ஸ் சாப்ட்வேர்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்க, சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க உதவுபவை கேம்ஸ் சாப்ட்வேர்கள். விண்டோசிலேயே டீபால்டாக நிறைய கேம்ஸ்கள் இருக்கும்.

Search Terms:

சாப்ட்வேர் என்றால் என்ன?
கம்ப்யூட்டர் என்றால் என்ன?
இலவச மென்பொருள்
மென்பொருள்/Menporul
ஆன்ட்டிவரைஸ்/Anti-Virus
கம்ப்யூட்டர் சாப்ட்வேர்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments