இதைப் படிச்சவுடனே ஏதோ ஐஸ்கிரீம் தயார் பன்றதுக்கான சாப்ட்வேர்ன்னு நினைச்சுக்காதீங்க. இது சாப்ட்வேர் கம்பெனியோட பேரு. இவங்க நிறைய யூஸ்புல் சாப்ட்வேர் கிரியேட் பண்ணி வெளியிட்டிருக்காங்க. அது என்னென்ன தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Icecream Image Resizer 1.47
JPG, Gif, PNG, jpg, bmp, tiff பார்மட்ல இருக்கிற எந்த ஒரு படத்தையும் ரீசைஸ் செய்து கொடுக்குது ஐஸ்கிரீம் இமெஜ் ரீசைர் டூல். அதுவும் ரொம்ப ஃபார்ஸ்டா செய்து கொடுக்குது. இது அருமையான, அற்புதமான இமேஜ் ரீசைர் சாப்ட்வேர். ஒரு சில செகண்டலயே வேலை முடிஞ்சது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தறது ரொம்ப ஈசி. ஒரே சமயத்துல ஒரு போல்டர்ல இருக்கிற இமேஜஸ் எல்லாத்தையும், விரும்பின சைசுக்கு மாத்திடலாம்.
உதாரணமா உங்க கிட்ட இருக்கிற போட்டோஸ் எல்லாமே பெரிய சைஸ்ல இருக்கு. அதை அப்லோட் பன்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அதுக்கு போட்டோஸ் எல்லாத்தையும் ரீசைஸ் பண்ணி வேண்டியிருக்கும். ஒவ்வொன்னா ரீசைஸ் பண்ணனும்னா நேரம் போதாது. அதனால் போட்டோஸ் இருக்கிற போல்டரையே அப்படியே டிராக் பண்ணி விட்டா போதும். எந்த சைசுக்கு மாத்தணும்ங்கிறதை செட் பண்ணிட்டு, கீழ இருக்கிற ரீசைஸ் ங்கிற பட்டனை அழுத்தினா போதும்.
நொடி நேரத்துல அதுல இருக்கிற எல்லா போட்டோசும் நீங்க குறிப்பிட்ட சைசுக்கு மாறிடும். இது ஒரு சூப்பரான மென்பொருள். குறிப்பாக போட்டோ கடை வெச்சிருக்கிறவங்க, வெப்சைட் வெச்சிருக்கிறவங்க, அப்புறம் ஸ்லைட் சோ மேக் பன்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும். இமேஜ் எல்லாமே ஒரே சைசா இருந்தாதானே பார்க்கிறதுக்கு நல்லா இருக்கும்.
இந்த இமேஜ் ரீசைரை டவுன்லோட் பண்ணனுமா கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணுங்க:
Icecream PDF Converter 2.70
நிறைய PDF Converter இருக்குங்க. இது ஒரு வகையான புது PDF Converter. நிறைய அட்வான்ஸ்ட் ப்யூச்சர்ஸ் இதுல இருக்கு. இது DOC to PDF, EPUB to PDF, JPG to PDF ன்னு எந்த ஒரு பார்மட்ல இருக்கிற TEXT/Image பைலையும் PDF ஆக நொடியில மாத்திக் கொடுக்குது.
இது சப்போர்ட் பண்ணும் பார்மட் பார்த்தீங்கன்னா PDF, DOC, JPG, PNG, EPUB, MOBI, BMP, XLS, TIFF, ODT, HTML. இது கூட இன்னும் சில பார்மட் பைலையும் PDF மாத்தி கொடுக்குது.
இந்த மென்பொருள் உங்களுக்குத் தேவைன்னா கீழ இருக்கிற லிங்க் கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க.
Icecream PDF Split&Merge 3.34
இது எதுக்குன்னா, ரெண்டு பிடிஎப் பைல்களை சேர்த்து ஒரே பிடிஎப் பைலா மாத்தறதுக்கும், ஒரு பிடிஎப் ஃபைலை சில PDF பைலாக பிரிச்சி தனி தனி File ஆக மாத்தறதுக்கும் யூஸ் ஆகுது.
ஒரு பெரிய பிடிஎப் பைலை Split பண்ணனும்னா இந்த சாப்ட்வேர் யூஸ் ஆகும். அதே போல 2 PDF ஃபைலை மெர்ஜ் பண்ணறதுக்கும் யூஸ் ஆகும். கண்டிப்பா இதுவும் ஒரு சூப்பர் மென்பொருள்தான். அதுவும் இலவசமா கொடுக்கிறாங்கன்னா சொல்ல வேணுமா என்ன?
இந்த சாப்ட்வேர் உங்களுக்கு பிடிச்சிருந்தா டவுன்லோட் பண்ணிக்கோங்க.