Wednesday, January 22, 2025
Homefree video converterவீடியோ டவுன்லோட் செய்ய மென்பொருள் !

வீடியோ டவுன்லோட் செய்ய மென்பொருள் ! [10000+ Websites ]

download video from 10000 sites
பத்தாயிரத்திற்கும் அதிகமான இணையதளங்களிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய பயன்படுகிறது ஓர் அருமையான மென்பொருள். வீடியோவை டவுன்லோட் செய்வது மட்டுமல்லாமல், ஒரு பார்மட்டிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு கன்வர்ட் செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 
FreeMakeVideo Downloader எனும் மென்பொருள் வாயிலாக இவை அனைத்தும் சாத்தியமாகிறது. 
இந்த மென்பொருளை பற்றி அந்நிறுவனம், Fastest YouTube Video Downloader என குறிப்பிட்டுள்ளது. யுடூபில் உள்ள வீடியோக்களை நிமிட நேரத்திற்குள் டவுன்லோட் செய்து கொடுக்கிறது. 
டியூப் மட்டுமல்ல.. இணையத்தில் பிரபலமான வீடியோ வெப்சைட்டுகளான Facebook, Vimeo, Dailymotion, Twitch, LiveLeak, Veoh போன்றவற்றிலிருந்தும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அது மட்டுமல்ல வேறு இணையதளங்களில் பார்க்கும் எந்த வகை வீடியோவாக இருந்தாலும் இதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். 
யூடூப் வீடியோ வெப்சைட்டில் உள்ள heavy 4K, Full HD, HD போன்ற தரத்தில் உள்ள வீடியோக்களையும் வெகு விரைவாகவும், எளிதாகவும் டவுன்லோட் செய்ய முடியும். 
ஒரு வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு முன்பு Video Size என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதனால் அந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமா, தேவையில்லையா என்ற முடிவை எடுக்க வசதியாக இருக்கும். 
ஒரே சமயத்தில் 500 வீடியோவை டவுன்லோட் செய்து சேமிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 
மேலும் இதில் ஒரு வசதி கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. யூடியூபிலிருந்து MP3 யை மட்டும் பிரித்தெடுக்க உதவும் டூலும் உள்ளது. 
ப்ரீமேக் வீடியோ டவுன்லோடர் மென்பொருளை தரவிறக்கச் சுட்டி:
Tags: video downloader, free video down-loader, freemake video converter, freemake video downloader, youtube video downloader, video download tool.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments