Wednesday, January 22, 2025
HomeFree softwareகம்ப்யூட்டருக்குத் தேவையான முக்கியமான மென்பொருட்கள்

கம்ப்யூட்டருக்குத் தேவையான முக்கியமான மென்பொருட்கள்

கம்ப்யூட்டர் சிறப்பாக இயங்கிட, கம்ப்யூட்டரில் முக்கியமாக பயன்படுத்தக் கூடியதுமான மென்பொருட்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக் கூடியவை. தேவையானவர்கள் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து “தரவிறக்கம்” செய்துகொள்ளலாம்.

important software for pc

1. சி-கிளீனர் – CCleaner

இது ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனருக்கும் கண்டிப்பாக தேவையான மென்பொருள். சிஸ்டத்தில் இருக்கும் தேவையற்ற “டெம்ப்” பைல்களை அழிக்க இது உதவுகிறது. மேலும் “ரெஜிஸ்ட்ரி” கிளீன் செய்யவும், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருட்களை அன்-இன்ஸ்டால் செய்திடவும் உதவுகிறது. மேலும் பயன்மிக்க வசதிகள் இதில் உள்ளடங்கியுள்ளன.

சி-கிளீனர் டவுன்லோட் செய்ய சுட்டி:

2. அவாஸ்ட் ஆன்டி வைரஸ் – Avast Free Antivirus

கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் புரோகிராம்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. இணையத்தொடர்பில் உள்ள கணினிகளுக்கு வைரஸ் பைல்கள் பரவாமல் தடுப்பதற்கும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. மால்வேர் தாக்குதல்களிலிருந்தும், கணினியில் உள்ளிடப்படும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்திடவும் இது உதவுகிறது. இந்த மென்பொருள் ஒட்டுமொத்தமாக 4.5 ஸ்டார்கள் பெற்றுள்ளது. தற்போதைய வெர்சன் இரண்டு ஸ்டார் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது.

அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் டவுன்லோட் செய்ய சுட்டி:


3. டிரைவர் பூஸ்டர் – Driver Booster

கம்ப்யூட்டரில் உள்ள டிரைவர் அப்டேட் செய்திட உதவும் மென்பொருள் இது. காலாவதியான டிரைவர்களை புதியதாக “அப்டேட்” செய்து புதுப்பிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.

“டிரைவர் பூஸ்டர்” மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி;

4. மால்வேர்பைட்ஸ் – Malware Bytes

சிஸ்டம் “மால்வேர்” பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கிறது. மல்வேர் பாதிப்பு உள்ள கம்ப்யூட்டர்களில், அவற்றை நீக்கி இயல்பாக இயங்கிட உதவுகிறது. முந்தைய வெர்சன்களை காட்டிலும் 4 மடங்கு வேகத்தில் “ஸ்கேன்” செய்து, கம்ப்யூட்டருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மால்வேர்களை நீக்கித் தருகிறது.

மால்வேர்பைட்ஸ் டவுன்லோட் செய்ய  சுட்டி:

5. இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் – Internet Download Manager

இன்டர்நெட்டில் வேகமாக பைல்களை டவுன்லோட் செய்திட உதவும் மென்பொருள் இது. டவுன்லோட் ஆகும்பொழுது இடைப்பட்ட நேரத்தில் நெட் கட் ஆனாலும் கூட, மீண்டும் விடுபட்ட இடத்திலிருந்து டவுன்லோட் தொடங்கிவிடும். மீண்டும் முதலிலிருந்து டவுன்லோட் செய்யத் தேவையில்லை. இணையத்தில் வீடியோ, ஆடியோ, திரைப்படங்கள் என பெரிய சைஸ் பைல்களை டவுன்லோட் செய்பவர்களுக்கு மிகவும் பயன்படும்.

6. ஒய்டிடி டவுன்லோடர் – YTD Video Downloader

யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்து ஆப்லைனில் பார்க்க உதவிடும் மென்பொருள். அது மட்டுமில்லாமல் வீடியோவை மொபைல்களின் பார்க்க கூடிய பார்மட்டிற்கு மாற்றிடவும் இது உதவுகிறது.
ஒய்டிடி டவுன்லோடர் டவுன்லோட் செய்ய சுட்டி:

7. வின்ரேர் – WinRaR

64 பிட் விண்டோஸ் கம்ப்யூட்டர்களுக்கு பயன்படும் வின்ரேர் மென்பொருள் இது. பைல்களை சுருக்கவும், விரிக்கவும் உதவும் அருமையான மென்பொருள். இதனை டவுன்லோட் செய்ய சுட்டி:

8. வி.எல்.சி மீடியா பிளேயர் – VLC Media Player

யுடீயூப் ஸ்ட்ரீமிங் வீடியோ பார்க்க, டவுன்லோட் செய்ய, திரைப்படங்கள் பார்க்க என உதவும் மென்பொருள் வி.எல்.சி மீடியா பிளேயர். இதில் பயன்மிக்க டூல்கள் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், வெவ்வேறு கோணங்களில், தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை சரியான கோணத்திற்கு மாற்றி பார்க்க உதவும் டூலை குறிப்பிடலாம்.

விஎல்சி மீடியா பிளேயர் டவுன்லோட் செய்ய சுட்டி:

9. போட்டோஸ்கேப் – PhotoScape

போட்டோக்களை வியூ செய்ய, எடிட் செய்ய, அவற்றிற்கு பிரேம் போட, கன்வர்ட் செய்ய, ரீசைஸ் செய்ய, கலர் கரெக்சன் செய்ய, பிரைட்னஸ் கரெக்ட் செய்ய என பல செயல்களைச் செய்திட உதவும் மென்பொருள் இது. பல போட்டோக்களை ஒன்று சேர்த்து ஒரு ஸ்டைல் ஷோ உருவாக்கி மகிழவும் இது உதவுகிறது.

போட்டோஸ்கேப் மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி :

10. வாட்சப் பிசி – Whatsapp for PC

கம்ப்யூட்டரில் வாட்சப் பயன்பட உதவிடும் மென்பொருள் இது. ஆரம்ப காலத்தில் ஸ்மார்ட்போனில் மட்டும் பயன்படுத்த முடிந்த வாட்சப் இப்பொழுது கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும்.

கம்ப்யூட்டர் வாட்சப் டவுன்லோட் செய்ய சுட்டி:

RELATED ARTICLES

Most Popular

Recent Comments