உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் வைரஸ் Wanna cry ransomware. இது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்கள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்து அழித்து விடுகிறது. இதனால் முக்கியமான டேட்டாகள் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த வைரசானது இதுவரைக்கும் 2 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கியுள்ளது. பள்ளிகள், நிறுவனங்கள், வங்கிகள் என முக்கியமான கம்ப்யூட்டர்களை சைபர் தாக்குதல் நடத்திய இந்த வைரஸ், தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யும்பொழுது, முடக்கப்பட்ட பைல்களை மீட்க பிணைத்தொகை கேட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கம்ப்யூட்டர்கள் மட்டுமல்ல, எம்.ஐ.ஆர் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களையும் தாக்கவல்லது.
வானா க்ரை ரேன்சம்வேர் உங்கள் கம்ப்யூட்டரை தாக்கியுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து, Start Task Manager என்பதை கிளிக் செய்வதன் மூலம் டாஸ்க் மேனேஜரை ஓப்பன் செய்திடலாம்.
அதில் “Processes” டேபை கிளிக் செய்து, அதில் புதியதாக ஏதேனும் .exe பைல் ரன் ஆகி கொண்டிருக்கிறதா என பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலம். வழக்கமான பைல்களிலிருந்து வேறுபட்ட ஃபைலாக இருந்தால், அதன் மீது ரைக் கிளிக் செய்து, Open File in Location கொடுத்து,அது இடம்பெற்றுள்ள போல்டருக்குச் சென்று அது பற்றி தெரிந்துகொள்ளலாம். தேவையில்லாத பைல் எனில், டாஸ்க் மேனேஜரில் அந்த பைலை மட்டும் தேர்வு செய்து “End Process” கொடுத்து நிறுத்திடலாம்.
ரேன்சம்வேர் கம்ப்யூட்டரை எப்படி தாக்குகிறது என்பதை விளக்கும் வீடியோ இது.
இது ஒரு மிக மோசமான வைரஸ். ரேன்சம் வைரசானது கம்ப்யூட்டரில் உள்ள பைலுக்கு டூப்ளிகேட் பைலை உருவாக்கி, ஒரிஜினல் பைல்களை அழித்து விடும். மீண்டும் அந்த பைல்கள் வேண்டுமானால், அது கேட்கும் பிணைத்தொகையை கொடுத்தால்தான், என்க்ரிப் செய்த பைலுக்கான கீயை கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரேன்சம்வேர் அழித்த பைலை எப்படி மீட்பது?
ரேன்சம்வேர் டெலீட் செய்த ஒரிஜினலை ஃபைலையே டேட்டா ரெகவரி பைல் மூலம் மீட்டு எடுக்கலாம் என Wonder Share நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரேன்சம்வேர் ரிமூவல் கைடு |
ஒன்டர்ஷேர் டேட்டா ரெகவரி மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Free Wondershare Data Recovery Software
இந்தமென்பொருள் மூலம் கம்ப்யூட்டரில் இருந்து டெலீட் செய்யப்பட்ட அனைத்து ஃபைல்களையும் ரெகவர் செய்திடலாம். மேலும் ரேன்சம்வேர் தாக்கப்பட்ட கம்ப்யூட்டரில் பேக்கப் ஆப்சன் இருந்தால் மிக எளிதாக அந்த பைல்களை மீட்டு, கம்ப்யூட்டரை முன்பு போல இயக்கிடலாம்.
அப்படியே இந்த கட்டுரையையும் படிச்சிடுங்க.
Ransomeware Removal in English
இந்த பக்கத்தில் இருக்கும் ரேன்சம் வேரால் தாக்கப்பட்ட பைலை டிகிரிப்ட் செய்ய இந்த மென்பொருள் உதவும்.
ரேன்சம் வேர் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட அனைவருக்கும் இந்தக் கட்டுரையை ஷேர் செய்திடவும்.
wanna cry ransomware removal from windows 7
Tags: Ransomeware removal,decrypt ransomware attracted files, Data Recovery, WonderShare, Wanna cry ransomeware removal, Windows virus removal.