Wednesday, December 25, 2024
Homeadobeஅடோப் போட்டோஷாப் 7 மென்பொருள் டவுன்லோட் செய்ய

அடோப் போட்டோஷாப் 7 மென்பொருள் டவுன்லோட் செய்ய

போட்டோஷாப் – மென்பொருள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் செய்ய பயன்படும் அற்புதமான மென்பொருள் அது. பிளக்ஸ் பேனர் (flex Banner) , திருமண பத்திரிக்கைகள், பத்திரிக்கை அட்டை படங்கள், விதவிதமான மணமக்கள் போட்டோக்கள் (The bride’s photos) என அனைத்துவித விஷேசங்களுக்கும் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் அழகூட்ட பயன்படும் மென்பொருள் போட்டோஷாப்.

adobe photoshop 7.0 free download
போட்டோ ஸ்டுடியோ (Photo Studio) வைத்துள்ள நண்பர்கள், போட்டோ கிராபர்கள், செல்போனில் படம் எடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் போட்டோஷாப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிப்படையான இன்னும் நிறையபேர் பயன்படுத்துவது போட்டோஷாப் 7.0. 
சாதாரண பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் ஸ்டுடியோவில் பயன்படுத்துவது போட்டோஷாப் மென்பொருள்தான். 
அப்படிப்பட்ட போட்டோஷாப் 7 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.

அதைப் பயன்படுத்துவதும் மிக எளிதுதான்.

ஒரு கம்ப்யூட்டர், அதில் போட்டோஷாப் மென்பொருள் இருந்தால் போதும். யாருடைய உதவியும் இன்றி நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம். 

போட்டோஷாப் டுடோரியல்

லட்சக்கணக்கான போட்டோஷாப் டுடோரியல்கள் (Photoshop Tutorials) இணையத்தில் உள்ளன. வீடியோ டுடோரியல்கள், PDF பைல்கள், வெப்சைட் டுடோரியல்கள் என பல விதங்களில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள டுடோரியல்கள் உண்டு. டுடோரியல்கள் மூலம் மிக விரைவாக போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். 

வெப்சைட்டில் உள்ள கட்டுரைகள் மூலமும் போட்டோஷாப் கற்றுக்கொள்ள முடியும். படித்து உணர்ந்து அதில் கொடுத்துள்ள செயல்முறைகளை அப்படியே செய்தால், ஆச்சர்யமான போட்டோ டிசைன்கள், கிராபிக்ஸ்களை நீங்களே செய்து முடிக்க முடியும். 

போட்டோஷாப் வர்சன்கள்:

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஆரம்ப காலத்தில் இருந்த நிலையை பார்த்தால் தற்பொழுது சிரிப்புதான் வரும். அதுபோலதான் போட்டோஷாப் (Photoshop Versions) உருவாவதற்கு முன்பு அதனுடைய நிலையும் இருந்தது. படிப்படியான முன்னேற்றமே முழுமையான நிலையை வந்தடையும் என்பதற்கு போட்டோஷாப் மட்டும் விதிவிலக்கல்ல. 
  • 0.87
  • 1.0
  • 2.0
  • 3.0
  • 4.0
  • 5.0
  • 6.0
  • 7.0
  • CS (8.0)
  • CS2 (9.0)
  • CS3 (10.0)
  • CS4 (11.0)
  • CS5 (12.0)
  • CS6, CS6 Extended (13.0)
  • CC (14.0)
  • CC (14.1)
  • CC (14.2)
  • CC 2014 (15.0 or 20140508.r.58)
  • CC 2014.2.2 (15.2.2 or 20141204.r.310)
  • CC 2015 (16.0 or 20150529.r.88)
  • CC 2015.1 (16.1 or 20151114.r.301)
  • CC 2015.5 (17.0 or 20160603.r.88)
  • CC 2015.5.1 (17.0.1 or 20160722.r.156)
  • CC 2017 (18.0 or 20161012.r.53)
  • CC 2017.0.1 (18.0.1 or 20161130.r.29)
  • CC 2017.1.0 (18.1.0 or 20170309.r.207)
  • CC 2017.1.1 (18.1.1 or 20170425.r.252)

தற்பொழுது புதிய பதிப்புகளில் அதிசயத்தக்க வகையிலான வசதிகள் வந்துவிட்டன. ஒரு போட்டோவை ஆட்டோமேட்டிக்கா போட்டோ கலர்கரெக்சன் (Color Correction) செய்ய முடியும், பிரைட்னஸ் கொடுக்க முடியும். ஷார்ப் செய்ய முடியும். பில்டர்ஸ் எனப்படும் வசதிகளின் மூலம் போட்டோக்களை நினைத்ததுக்கு மேலாக தரமுயர்த்த முடியும். 

ஆன்லைன் போட்டோ டிசைன் டூல்கள்

தற்காலத்தில் மிக விரைவாக ஒரு போட்டோவிற்கு பேக்ரவுண்ட்மாற்றுவது,போட்டோ ஸ்டைல் மாற்றுவது, விதவிதமான கிராபிக்ஸ் (Graphics) செய்வது என வசதிகள் வந்துவிட்டன.

அதற்கென பலதரப்பட்ட இணையதளங்கள் அந்த சேவைகளை வழங்குகின்றன. ஆன்லைன் போட்டோ டிசைன் டூல்கள் என அழைக்கபடும் அந்த வசதிகள் ஒரு சில கிளிக்குகளில் செயல்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 

போட்டோஷாப் போன்ற மென்பொருட்கள்

போட்டோஷாப்பில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் உள்ளடக்கிய சிறு சிறு மென்பொருட்கள் (Portable Photo Edit software) எண்ணிக்கையில் அதிகம் உள்ளன. உதாரணமாக போட்டோவை ரீசைஸ் (Resize) செய்வது, போட்டோவின் பிக்சல் (Pixel) அளவை குறைப்பது, இன்வர்ட் செய்வது போன்ற பயன்பாடுகளை கொண்டிருக்கும். 

ஸ்மார்ட்போன் பில்டர் ஆப்ஸ்கள்

போட்டோக்களை வித விதமாக மாற்றுவதற்கு ஆன்ட்ரோய்ட் ஆப்ஸ்கள் (Android Photo App) நிறைய வந்துவிட்டன. ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் படங்களை உடனுக்குடன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பில்டர் ஆப்சன்களை பயன்படுத்தி அழகூட்ட முடியும்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவது, முகத்தை பளபளப்பாக மாற்றுவது, ரெட் ஐ ரீமூவல் (Red Eye Removal) , லிப்ஸ்டிக் பூசுவது, கண்களின் பிரைட்னஸ் அதிகமாக்குவது என நிறைய வசதிகள் அதிலேயே உள்ளடங்கி வந்துவிட்டது. 

வேடிக்கையான போட்டோ பில்டர்கள்:

ஆன்லைன் வசதிகளிலும் சரி, ஆன்ட்ராய்ட் ஆப்களிலும் சரி, முகத்தின் தன்மையை மாற்றக்கூடிய ஆப்ஸ்கள், பயன்பாடுகள் நிறைய வந்துவிட்டன.

ஒருவரின் முகத்தை வயதான தோற்றத்தில் எப்படி இருக்கும் என்பதை மாற்றிட முடியும். பெண் தோற்றத்தில் (face look) எப்படி காட்சியளிக்கும் என மாற்ற முடியும். சினிமா கேரக்டர்களில் மாற்ற முடியும், ஓவியமாக மாற்ற முடியும், 3D படமாக மாற்ற முடியும். இப்படி கணக்கிலடங்கா வசதிகள் வந்துவிட்டன. 

இப்படிப்பட்ட வசதிகள் அருமையாக இருக்கும். இருப்பினும் அனைவருக்கும் அது திருப்தியை தருமா என்றால், நிச்சயமாக இருக்காது. ஏனெனில் அவர்கள் விரும்பும் தனிப்பட்ட விஷயத்தை அதுபோன்ற ஆப்ஸ்களால் கொடுக்க முடியும். 
அதற்கு ஒரே வழி போட்டோஷாப் மென்பொருள்தான். தனிப்பட்ட முறையில், மிகச் சிறப்பாக கற்பனைக்கு ஏற்றவாறு போட்டோக்களை மாற்றிட பயன்படும் ஒரு மென்பொருள் உண்டென்றால் கண்டிப்பாக அது Adobe Photoshop மென்பொருள் தான். போட்டோஷாப் அடிப்படைகளை கற்றுக்கொள்ள மிக மிக எளிதாக இருக்கும் மென்பொருள் Adobe Photoshop தான்.
இலவசமான அடோப் போட்டோஷாப் 7 மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments